"திட்டமிட்டபடி டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடைபெறும்" - ஜப்பான் பிரதமர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சீனாவின் வுஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கோவிட்-19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் இன்று உலகையே மிரட்டும் அரக்கனாக மாறியுள்ளது. சீனா மட்டுமின்றி இந்தியா, அமெரிக்கா, லண்டன், ரஷ்யா, உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ள இந்த வைரஸால் ஏற்படும் நோய்க்கு இதுவரை முழுமையாக மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.


Advertisement

image

இதற்கிடையே கொரோனா வைரஸ் பாதிப்புகள் நீடிக்கும் பட்சத்தில் ஜப்பானில் நடைபெறவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படும் எனத் தகவல் வெளியானது. இது தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியைச் சேர்ந்த ஒருவர் கூறியதாக அசோசியேட்டட் பிரஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டது. மேலும், ஒலிம்பிக் போட்டிகளை வேறு தேதியில் ஒத்திவைக்கவோ அல்லது வேறு இடத்திற்கு மாற்றும் எண்ணமோ இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.


Advertisement

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த அச்சம் இருந்தாலும், திட்டமிட்டபடி டோக்யோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என ஜப்பான் பிரதமர் ஜின்சோ அபே தெரிவித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

image

ஒலிம்பிக் போட்டிகள் நெருங்கி வரும் நிலையில், கொரோனாவை எதிர்கொண்டு முறியடிப்பது சவாலான பணியாக இருப்பதாகவும் அபே தெரிவித்த‌ர். டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் 705 பேர் உள்பட ஜப்பானில் 940 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.


Advertisement

புதிய வசதிகளுடன் அறிமுகமாகிறது கூகுளின் ஆண்ட்ராய்டு 11!

loading...

Advertisement

Advertisement

Advertisement