கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட 8 எம்.எல்.ஏக்களை இழந்த தமிழக சட்டப்பேரவை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மறைந்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, ‌கருணாநிதி உள்ளிட்ட இருபெரும் தலைவர்களுடன் சேர்த்து மொத்தம் 8 எம்.எல்.ஏக்களை 15ஆவது சட்டப்பேரவை இழந்துள்ளது.


Advertisement

image

15-ஆவது சட்டபேரவைத் தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்புடன் 2016-ஆம் ஆண்டு‌ நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அதிமுக 134 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. 89 தொகுதிகளில் வெற்றி கண்ட திமுக‌, எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. இப்படி அசத்த‌லாக தொடங்கிய சட்‌டப்பேரவை, துரதிர்ஷ்டவசமாக பல இழப்புகளைச் சந்தித்துள்ளது. தமிழக அரசியலில் மாபெரும் ஆளுமையாக இருந்த இருபெரும் தலைவர்களான மு.கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவரின் மரணச் செய்திகள் தமிழகத்தையே உலுக்கின. அந்த இரு தலைவர்களுடன் சேர்த்து மொத்தம் 8 எம்.எல்.ஏக்கள் இதுவரை காலமாகிவிட்டனர். இது இந்த சட்டப்பேரவை வரலாற்றில் ஆறாத வடுவாய் பதிந்துவிட்டது.


Advertisement

‘துரோகிகளை சுடுங்கள்’- கோஷம் போடும் இளைஞர்கள்.. போலீஸ் விசாரணை 

 

image


Advertisement

2016-ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.எம்.சீனிவேல், வாக்குப்பதிவு முடிந்த மறுநாளே தான் வெற்றி பெற்றதைக் கூட அறியாமல் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்தார். சென்னை ஆர்.கே.நகரில் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சராக பதவி வகித்த ஜெயலலிதா, உடல்நலக்குறைவால் 2016 டிசம்பர் 5-ஆம் தேதி காலமானார். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ், 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். தனது சொந்த ஊரான திருவாரூரில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினரான மு.கருணாநிதி, 201‌8-ஆம் ஆண்டு ஆ‌கஸ்ட் 8-ஆம் தேதி, உடல்நலக் கு‌றைவால் காலமானார்.

image

எம்பி பதவிக்கு தேமுதிகவுடன் ஒப்பந்தம் செய்யவில்லை: அமைச்சர் ஜெயக்குமார் 

அவரைத்தொடர்ந்து, சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., கனகராஜ், கடந்த ஆண்டு மார்ச் 3-ஆம் தேதி காலமானார். விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ராதாமணி, 2019 ஜூன் ‌14-ஆம் தேதி இயற்கை எய்தினார். இந்த நிலையில், திருவொற்றியூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி.சாமி‌ கடந்த 27ஆம் தேதியும், குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக எம்.எல்.ஏ., காத்தவராயன், 28-ஆம் தேதியும் உடல்நலக்குறைவால் காலமாகினர். கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை 8 எம்.எல்.ஏக்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் அதிமுகவைச் சேர்ந்த நான்கு பேரும் திமுகவைச் சேர்ந்த நான்கு பேரும் அடங்குவர். இப்படி அதிக ‌சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியின்போதே மரணம் அடைந்திருப்பது 15ஆவது சட்டப்பேரவையில் மட்டும் தான்.

loading...

Advertisement

Advertisement

Advertisement