JUST IN

ஐபிஎல் கோப்பையை தட்டி தூக்க திட்டம் போடும் டெல்லி கேபிடல்ஸ் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐபிஎல் ஆரம்பித்த புதிதில் டெல்லி டேர்டெவில்ஸ், இப்போது அதற்கு பெயர் டெல்லி கேபிடல்ஸ் அவ்வளவுதான். 12 ஆண்டுகள் ஐபிஎல் வரலாற்றில் பெயர்தான் மாறியதே தவிர, வெற்றி கிடைக்கவில்லை என்பதுதான் சோகம். ஆனால் வரும் மார்ச் 29-ஆம் தேதி தொடங்கவுள்ள 13-ஆவது ஐபிஎல் சீசனில் ஸ்ரேயாஸ் தலைமையிலான டெல்லி அணி கோப்பையை வெல்லும் இலக்கோடு களமிறங்க காத்திருக்கிறது. இம்முறை டெல்லி கோப்பையை வெல்லும் என்று கிரிக்கெட் வல்லுநர்களும் கருதுகின்றனர்.

image

ஐ.பி.எல். தொடரில் தற்போது விளையாடும் அணிகளில் டெல்லி கேபிடல்ஸ் அணி மட்டுமே இதுவரை ஒருமுறை கூட இறுதிப்போட்டிக்கு செல்லவில்லை. 12 ஆண்டுகள் கனவை நினைவாக்கும் வகையில் புத்துணர்ச்சியுடன் இந்தாண்டு டெல்லி கேபிடல்ஸ் இளம் வீரர்கள் கொண்டு விஸ்வரூபம் எடுக்க தயாராகி வருகிறது. ஐ.பி.எல். தொடரில் 12 சீசனில் 4 முறை மட்டுமே ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது அந்த அணி.

image

ஐபிஎல் 2020: மகுடம் சூடிய ராஜாவாகுமா கிங்ஸ் லெவன் பஞ்சாப் ! 

சேவாக், கம்பீர், டி வில்லியர்ஸ், வார்னர், பீட்டர்சன் என பல ஜாம்பவான்கள் முதல் சில தொடர்களில் டெல்லி அணியில் விளையாடினார்கள். 7 கேப்டன்கள், 6 பயிற்சியாளர்கள் என டெல்லி அணி ஒவ்வொரு ஆண்டும் பல மாற்றங்கள் கொண்டு வந்த நிலையிலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ஐ.பி.எல். வரலாற்றில் மோசமான புள்ளி விவரங்கள் கொண்ட அணியாக டெல்லி உள்ளது. ஆனால் இம்முறை டெல்லி அணிக்கு ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக உள்ளதால் அந்த அணி வீரர்கள் கூடுதல் மனோ பலத்தோடு களமிறங்க காத்திருக்கின்றனர்.

image

இம்முறை டெல்லி அணியில் இளம் வீரர்கள் மட்டுமல்லாமல் அஷ்வின், ரஹானே ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர். கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுவரை தகுதிப் பெற்றது ஸ்ரேயாஸ் தலைமையிலான டெல்லி அணி. இம்முறை டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானேவும், பிருத்வி ஷாவும் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு அனுபவ வீரர் மற்றொரு அதிரடி வீரர் என களமிறங்குகிறது டெல்லி அணி. ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பன்ட் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடினால் அந்த அணியை அசைக்க முடியாது.

image

வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹெட்மயரை ரூ.7.5 கோடி கொடுத்து வாங்கியுள்ளது டெல்லி அணி. அதிரடி ஆட்டத்துக்கு பெயர்பெற்ற ஹெட்மயர் அற்புதமாக விளையாடினால் வெற்றிகள் எளிதில் டெல்லியின் வசமாகும். அதேபோல ஆல்ரவுண்டர்களான இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் மார்ஸ் ஸ்டோனிஸையும் டெல்லி அணி விலைக்கு வாங்கியுள்ளது. அதனால் ஆல் ரவுண்டர்களுக்கு பஞ்சமில்லை என்பதும் தெரிகிறது. வேகப்பந்து வீச்சுக்கு தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடாவும் டெல்லி அணியில் இருக்கிறார். டெத் ஓவர்களில் ரபாடாவின் பந்துவீச்சு அசுரத்தனமாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

‘அதே சீறும் சிங்கம்தான்’.. லோகோவை மாற்றிய ராயல் சேலஞ்ஜர்ஸ் 

image

அதேபோல சுழற்பந்து வீச்சில் அஸ்வினும், அமித் மிஸ்ராவும் கைகொடுப்பார்கள் என்று டெல்லி கேபிடல்ஸ் எதிர்பார்க்கிறது. ரிக்கி பாண்டிங்கின் வழிக்காட்டுதலும் இளம் வீரரும் கேப்டனுமான ஸ்ரேயாஸ் ஐயரின் திறமையான கேப்டன்ஷிப்பும் இம்முறை டெல்லி அணியை இறுதிப் போட்டிக்கு முன்னேற வைக்கும் என தலைநகர் டெல்லி ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என்பதே நிஜம்.

Advertisement: