உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம்: இளைஞர் வெட்டி கொலை..!

Youth-hacked-to-death

 


Advertisement


முதுகுளத்தூர் அருகே உள்ளாட்சி தேர்தல் முன்விரோதத்தால் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

முதுகுளத்தூர் அருகே உள்ளது திருவரங்கம் கிராமம். இந்தக் கிராமத்தை சேர்ந்த பொன்னிவளவன் என்பவரது தாயார் அன்னபூரணம். அதேகிராமத்தை சேர்ந்தவர் மலைச்சாமி. அவரின் அண்ணன் கோபால், அவரது மனைவி ராமஜெயம். கடந்த உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அன்னபூரணம் மற்றும் ராமஜெயம் போட்டியிட்டுள்ளனர். இதில் பொன்னிவளவன் தாயார் அன்னபூரணம் வெற்றி பெற்றார்.


Advertisement

image

இதனிடையே பொன்னிவளவன், மலைச்சாமி ஆகியோர்களுக்கு இடையே கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் இன்று பொன்னிவளவன் தனது இருசக்கர வாகனத்தில் மிளகாய் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் அவரை அரிவாள், வாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து அங்கிருந்து தப்பியுள்ளனர்.

‘வடசென்னை’யில் அந்தக் காட்சியில் நடித்தது தவறான முடிவு - ஆண்ட்ரியா


Advertisement

image

OLX மூலம் ரூ.100 கோடி வரை மோசடி.. சொகுசாக வாழ்ந்த கிராமம்.. நடந்தது என்ன.?

இது குறித்து தகவல் அறிந்த கீழத்தூவல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடற்கூறு ஆய்வுக்காக முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு
பொன்னிவளவன் உடலை அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement