JUST IN

‘எல்லாம் வதந்தி; என் அப்பா நலமுடன் உள்ளார்’ - ஆர்.சுந்தர்ராஜனின் மகன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தனது தந்தையான நடிகர் ஆர்.சுந்தர்ராஜன் நலமுடன் இருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாமென்றும் அவரது மகன் அசோக் சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

நடிகர், இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகங்களைக் கொண்டவர் ஆர்.சுந்தர்ராஜன். பயணங்கள் முடிவதில்லை, வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோயில் கிழக்காலே, மெல்லத் திறந்தது கதவு, திருமதி பழனிச்சாமி ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியவர் ஆர்.சுந்தர்ராஜன். பல படங்களை இயக்கியதோடு மட்டுமல்லாமல் நடிகராகவும் தன் திறமையை திரையில் காட்டியவர். தற்போது 70வயதான சுந்தர்ராஜன் அவ்வப்போது சில படங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

image

இந்நிலையில், நடிகர் சுந்தர்ராஜன் தொடர்பாக சமூக வலைதளங்களில் சில செய்திகள் பரவின. அவருக்கு உடல்நலக்குறைவு என்றும், அவர் காலமாகிவிட்டதாகவும் செய்திகள் உலாவின. இந்நிலையில், இணையத்தில் பரவும் செய்திகள் அனைத்தும் வதந்தி என அவரது மகன் அசோக் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

116 கோடி செல்போன்கள்.. கேம் விளையாடுவதில் தீவிரம்: இந்தியர்களின் நிலை என்ன?

image

இது தொடர்பாக தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''என்னுடைய அப்பா சுந்தர்ராஜன் உடல் ஆரோக்யத்துடன் நலமுடன் உள்ளார். அவர் தற்போது சென்னையில் படப்பிடிப்பில் உள்ளார். அவர் உடல்நலம் தொடர்பாக யாரும் வதந்திகளை பரப்பாதீர்கள்'' என தெரிவித்துள்ளார்.

Advertisement: