JUST IN

அமெரிக்கா - தலிபான்கள் இடையே இன்று அமைதி ஒப்பந்தம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
அமெரிக்கா - தலிபான்கள் இடையே இன்று கத்தாரில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. 
 
கடந்த 20 ஆண்டுகளாக ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆயுதமேந்திய மத அடிப்படைவாத இயக்கமாக தன்னை தக்கவைத்துக் கொண்டிருக்கும் அமைப்பு தலிபான்கள். தலிபான் இயக்கம் 1994-ம் ஆண்டு காந்தஹார் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. தலிபான்கள் என்றால் மாணவர்கள் என்று பொருள்.
 
image
 
சுமார் 50 மாணவர்களுடன் முல்லா ஒமர் தலைமையில் இந்த இயக்கம் செயல்படத் தொடங்கியது. சோவியத் போரின் கொடுமையாலும், உள்நாட்டுப் போரின் சித்திரவதைகளில் இருந்தும் தப்பித்து பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் தங்கியிருந்த அகதிகள் இந்த இயக்கத்தில் இணையத் தொடங்கினர்.
 
 
ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த 18 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அரசுப் படைக்கு ஆதரவாக அமெரிக்க வீரர்கள் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
image
 
நீண்டகாலமாக நடைபெற்று வரும் இந்தச் சண்டையை முடிவுக்கு கொண்டுவரவும் தமது படைகளை தி‌ரும்பப் பெறவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதற்காக, தலிபான்கள்- அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் கத்தார் தலைநகர் தோகாவில் இன்று கையெழுத்தாகிறது. இதில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், கத்தார் நாட்டிற்கான இந்திய தூதர்கள், ரஷ்யா மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.
Advertisement: