ரஜினிகாந்துடன் இணைவீர்களா..? - கமல்ஹாசனின் சூசகமான பதில்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ரஜினிகாந்துடன் இணைவீர்களா என்ற கேள்விக்கு நேர்மையை நோக்கி யார் பயணிக்கிறார்களோ அவர்கள் நிச்சயம் இணைவார்கள் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.


Advertisement

இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார். டெல்லியில் நடந்து வரும் கலவரங்கள் குறித்து கடந்த சில நாள் முன் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, “டெல்லியில் ஏற்பட்ட போராட்டத்திற்கு (வன்முறை) உளவுத்துறையின் தோல்வியே காரணம். அதற்காக மத்திய அரசைக் கண்டிக்கிறேன்” என்று கூறியிருந்தார். அதற்குப் பதிலளித்த கமல்ஹாசன், “சபாஷ் நண்பர் ரஜினிகாந்த் அவர்களே, அப்படி வாங்க. இந்த வழி நல்ல வழி. தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜ பாட்டை. வருக, வாழ்த்துகள்” என தெரிவித்திருந்தார்.

image


Advertisement

திரைத்துறையில் இரு நட்சத்திரங்களாக கருதப்பட்ட இவர்கள் அரசியலிலும் அப்படி பிரகாசிப்பார்களா என்ற கேள்வி தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. இதனிடையேதான் ரஜினியின் கருத்தை கமல் ஆதரித்து கூறியிருந்தார்.

பி.இ படிப்புகளுக்கு வேதியியலை கட்டாயப் பாடமாகத் தொடர்ந்து நீட்டிக்க வைகோ கோரிக்கை

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், பல கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது ரஜினி குறித்த கேள்வியும் அவரிடம் முன்வைக்கப்பட்டது. அதற்கு தமிழகத்தின் மேம்பாடு என்ற அடிப்படையில் நாங்கள் இருவரும் ஒன்றான கருத்துகளை கூறிவந்தோம். நேர்மையை நோக்கி யார் பயணிக்கிறார்களோ அவர்கள் நிச்சயம் இணைவார்கள் என்று கமல்ஹாசன் கூறினார்.


Advertisement

மாநிலங்களவை எம்.பி பதவி: இரு தினங்களில் முதல்வரை சந்திப்போம் - பிரேமலதா விஜயகாந்த்

மேலும், அதிமுக மற்றும் திமுக அல்லாத கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, கூட்டணி அமைக்க வாய்ப்பு இருக்கிறதா என்பதை வரும் காலங்கள்தான் உங்களுக்கு சொல்லும். இன்றே நான் அதற்குப் பதில் சொல்லிவிட்டால் அவசரத்தில் சொன்னதாக உங்களுக்கு தோன்றலாம். இல்லை என்றால் அகந்தையில் சொன்னதாக கூட உங்களுக்கு தோன்றலாம். நாங்கள் செய்கின்ற செயல்களில் இருந்து மக்கள் உங்கள் கேள்விக்குப் பதில் தருவார்கள் என்று நம்புகிறேன் என்றார்.

image

அதனையடுத்து அவரிடம் உங்களை தலைமையாக ஏற்கும் கட்சியுடன்தான் கூட்டணி அமைப்பீர்களா என்றதற்கு அவர், “எங்களின் முனைப்பு அதை நோக்கி. நாங்கள் அதிகாரத்தை பார்க்க விரும்புகிறோம் என்று சொல்வது அதை வெறித்தனமாக கைப்பற்ற வேண்டும் என்பதற்காக அல்ல. அதிகாரத்தை எப்படி மாற்றுவது? அதில் வாக்காளர்களுக்கும் பங்கு இருக்கின்றது. இப்படி பார்த்தால் அப்படி தட்டிக் கொண்டு போகிறார்கள் என்ற குழப்பங்கள் இருக்கின்றன. அதை மாற்ற இப்போது இருக்கின்ற வட்டத்தில் இருந்து அப்பாற்பட்ட தலைமை வேண்டும். அது எங்களிடம் இருப்பதாக நம்புகிறோம். இதில் என்னை முன்னிருத்துவதாக நீங்கள் பார்க்கலாம். ஏனென்றால் எங்கள் கட்சியில் உள்ள கூட்டம் எனக்கு அந்த வாய்ப்பை தந்துள்ளது. அதற்காக அவை அடக்கம் கருதி நான் இல்லை என மறுத்துவிட விரும்பவில்லை” என்றார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement