இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவரது ட்விட்டர் பக்கத்தில் ‘கோப்ரா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அதிகாரப்பூர்வமாக பகிர்ந்து கொண்டுள்ளார்.
அஜய் ஞானமுத்து எடுத்து வரும் ‘கோப்ரா’ படத்தில் நடிகர் விக்ரம் நடித்து வருகிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடந்தது. அடுத்த படப்பிடிப்புக்கான வேலைகள் நடந்து வருகின்றன. இந்தப் படத்தின் வேலைகள் இன்னும் முடிவடையாத நிலையில், சில வாரங்களுக்கு முன் இதன் வெளியீடு குறித்து ஒரு தகவல் வெளியானது. இப்படம் வரும் மே மாதம் 22 ஆம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அல்ல.
இதற்கிடையே, இப்படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து சில நாட்களுக்கு முன் அவரது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளித்திருந்தார். அதில் ‘கோப்ரா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இந்த மாதம் வெளியிடப்படும் என்ற தொனியில் கூறியிருந்தார். 'கோப்ரா' படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதனால்தான் அவரது மகன் துருவ் விருது விழா நிகழ்ச்சியில் கூட விக்ரமினால் கலந்து கொள்ள முடியவில்லை. சென்னையை அடுத்து ஐரோப்பா மற்றும் ரஷ்யாவில் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர், நடிகைகள் சம்பளத்தை பிடிப்பது சரியா? - சர்ச்சைக்கு கஸ்தூரி, தனஞ்செயன் கருத்து
இந்நிலையில், ‘கோப்ரா’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். போஸ்டரில் விக்ரம் விதவிதமான ஏழு தோற்றங்களில் உள்ளார். சவுத் ஆப்ரிக்கன் மற்றும் ஜப்பானியர் போன்ற தோற்றங்கள் அதில் அடங்கும். மேலும், எட்டாவது தோற்றத்திற்கான விக்ரமின் முகம் பகிரப்படவில்லை. சஸ்பென்ஸாக அவர் முகத்தை திருப்பிக் கொண்டு நிற்கிறார். போஸ்டரை பகிர்ந்துள்ள ரஹ்மான், ‘கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டதில் மகிழ்ச்சி’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் படத்தில் ‘கே.ஜி.எஃப்’ நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். இதனை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்து வருகிறது. இந்தப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
Loading More post
திருச்சி: மழைநீரில் மூழ்கி 50,000 ஏக்கர் நெற்பயிர் நாசம்; இழப்பீடு வழங்க கோரிக்கை
’’நான் நிச்சயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன்’’ - முதல்வர் பழனிசாமி
கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இருப்பது என்ன?
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு