சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 9 பேர் உயிரிழந்த பேருந்து விபத்தில் உயிர் தப்பிய 3 நேபாளிகள், தங்க இடமின்றி விபத்துக்குள்ளான பேருந்திலேயே வசித்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
நேபாளத்தை சேர்ந்த 32 பேர் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களை சுற்றிப்பார்ப்பதற்கு சுற்றுலா வந்துள்ளனர். கோவில்களை சுற்றிப்பார்ப்பதற்கு ஏதுவாக ஆம்னி பேருந்தை புக் செய்து வந்த அவர்கள், இறுதியாக கன்னியாகுமரியில் உள்ள இடங்களை சுற்றிப்பார்த்துள்ளனர். அதன் பின்னர் அங்கிருந்து ராஜஸ்தான் செல்ல திட்டமிட்ட அந்தக்குழு அங்கிருந்து புறப்பட்டது.
பேருந்தை நேபாளம் காத்மாண்டூவைச் சேர்ந்த கவுல்ராம் சவுதாரி என்பவர் ஓட்டி வந்தார். பேருந்து சேலம் - பெங்களுர் சாலையில் வந்து கொண்டிருந்த போது, சோர்வு காரணமாக அருகில் உள்ள மண்டபத்தில் தங்கி பயணத்தை காலை தொடரலாம் என்று முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து ஓட்டுனர் கவுல்ராம் சவுதாரி பேருந்தை இடதுபுறத்தில் இருந்து வலது புறத்திற்கு திருப்பியதாக தெரிகிறது.
சாலிகிராமம் சினிமா படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து
அப்போது, அந்த வழியில் கேரளா நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து இந்த மினிப் பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த பிற பயணிகள் அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. விபத்தில் சிக்கிய இரண்டு பேருந்துகளையும் ஓமலூர் போலீசார் மீட்டு காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இந்தப் பேருந்து விபத்தில் சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுங்கச்சாவடிகளில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும் தெரியுமா..?
இதில் இன்னொரு வேதனை தரும் விஷயம் என்னவென்றால், இவற்றில் ஒரு பேருந்தில், 3 நேபாளிகள் கடந்த 8 நாட்களாக தங்க வழியின்றி தங்கி உள்ளனர். இது குறித்து அவர்கள் கூறும் போது “பேருந்து சேதம், மருத்துவமனையில் உள்ளவர்கள், காவல்துறை விசாரணை ஆகியவற்றால் நேபாளம் செல்ல வழியின்றி தாங்கள் வந்த பேருந்திலேயே தங்கி இருக்கிறோம்” என்று கூறினர்.
Loading More post
5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான முதலீடு: பால் தினகரனுக்கு சம்மன்
‘வங்கத்து சிங்கம்’ சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று!
ஓசூர் முத்தூட் நிதி நிறுவன கொள்ளை - 6 பேரை கைது செய்தது காவல்துறை
'வாங்க, ஒரு கை பார்ப்போம்' - தமிழக வருகையை வீடியோ மூலம் பதிவிட்ட ராகுல் காந்தி!
''உருமாறிய கொரோனா மிகுந்த ஆபத்தானது'' - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’