JUST IN

வன்முறைக்கு நடுவே இஸ்லாமியர்கள் பாதுகாப்புடன் நிகழ்ந்த இந்துப் பெண்ணின் திருமணம்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டெல்லியில் வன்முறை சூழலுக்கு நடுவே இஸ்லாமியர்களின் பாதுகாப்புடன் இந்துப் பெண்ணின் திருமணம் நடைபெற்ற நெகிழ்ச்சியாக சம்பவம் அரங்கேறியுள்ளது.

தெருவெங்கும் ஒரே கலவரம்.. மக்களின் அச்சம் கலந்த பயங்கரமான அலறல்கள்.. தாக்குதல் நடத்திய காட்டுமிராண்டிகளின் ஆங்கார குரல்கள்... ஒரு போர்க்களத்தை ஒத்த காட்சிகள் வெளியே அரங்கேறிக் கொண்டிருந்த வேளையில், கைகளில் மருதாணி அலங்காரங்களுடன், முகத்தில் மஞ்சள் நிறைய திருமணக் கோலத்தில் பெண் ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் அடுத்த அத்தியாயத்தில் காலடியெடுத்து வைக்க வீட்டிற்குள் காத்திருந்தாள்.

       image


டெல்லி வன்முறை குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் கவலை 


ஆம், கிழக்கு டெல்லியைச் சேர்ந்த 23 வயதான சாவித்ரி பிரசாத்திற்கு கடந்த 24-ஆம் தேதி திருமணம்.  ட்ரம்ப் வருகையின் முதல் நாளிலே வன்முறை சம்பவங்கள் தொடங்கிவிட்டன. கட்டுப்படுத்த முடியாமல் வன்முறை வெறியாட்டம் நிகழ்ந்து கொண்டிருந்ததால், திருமணம் ஒத்திவைக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது. வேறு வழியில்லாம் திருமணத்தை நிறுத்தினார் பெண்ணின் தந்தை போத்தே.

கிழக்கு டெல்லி முழுவதும் மறுநாள் செவ்வாய்கிழமையும்(பிப்.25) வன்முறை தாண்டவமாடியது. ஆனால், வன்முறை சம்பவங்கள் சுற்றிலும் நிகழ்ந்து கொண்டிருந்த நேரத்திலும் தன்னுடைய மகளின் திருமணத்தை நடத்தி முடித்துள்ளார் சாவித்ரியின் தந்தை. இஸ்லாமிய சகோதரர்கள் எங்களுடன் துணை இருக்க திருமணம் நடத்துவதில் எவ்வித அச்சமும் இல்லை என சாவித்ரியின் தந்தை பெருமிதத்துடன் கூறியிருக்கிறார். இஸ்லாமியர்களின் பாதுகாப்புடன், இஸ்லாமியர் ஒருவரது வீட்டில் வைத்து தனது மகளின் திருமணத்தை முடித்து வைத்தார் போத்தே.

“இஸ்லாமிய சகோதரர்கள் தனக்கு பாதுகாப்பு அளித்தனர்” என்று மணப்பெண் சாவித்ரி பிரசாத் ராய்ட்டர்ஸ் செய்திக் குழுவினருக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இடவசதி குறைவாக உள்ள சாவித்ரியின் இல்லத்தில்தான் இந்த திருமண நிகழ்ச்சிகள் நடந்திருக்கிறது. வன்முறை காரணமாக அவரது உறவினர்கள் யாரும் வரவில்லை.

      image


டெல்லி உளவுத்துறை அதிகாரி பலமுறை கத்தியால் குத்திக்கொலை- வெளியான அதிர்ச்சி தகவல் 


திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆமிர் மாலிக் என்பவர் கூறுகையில், “எங்களுடைய இந்து சகோதரர்களுடன் நாங்கள் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் அவர்களுக்காக எதையும் செய்வோம். அதுபோலத்தான் தற்போது அவர்களுக்காக இங்கு இருக்கிறோம்” என்றார்.

மணப்பெண்ணின் தந்தை போத்தே, “வன்முறை சம்பவங்கள் மிகவும் பயங்கரமாக இருந்தது. நாங்கள் அமைதியை விரும்பினோம். வன்முறைக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியவில்லை. ஆனால், வன்முறையில் ஈடுபட்டவர்கள் யாரும் எங்கள் வீடுகளுக்கு அருகில் இருந்தவர்கள் கிடையாது. இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே எவ்வித விரோதமும் கிடையாது” என்று கூறினார்.

அத்துடன், “இன்று என்னுடைய மகளின் திருமண நிகழ்ச்சியில் எங்களது உறவினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. ஆனால், எங்களுடைய இஸ்லாமிய அண்டை வீட்டார்கள், சகோதரர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்களும் எங்களுடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான்” என்றும் அவர் நெகிழ்ச்சியாக கூறினார்.

             image


டெல்லி வன்முறை: உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு 


டெல்லியில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறை சம்பவங்களுக்கு நடுவேயும் இஸ்லாமிய, இந்து சகோதரர்கள் தங்களது ஒற்றுமையை மீண்டும் நிலைநாட்டியுள்ளனர். வன்முறையில் வீடுகளை இழந்த இஸ்லாமியர்களுக்கு இந்து சகோதரர்கள் தங்களது வீடுகளில் அடைக்கலம் கொடுத்தார்கள். உணவு கொடுத்தார்கள். மதத்தை வைத்து சிலர் ஆதாயம் அடைய நினைத்தாலும் இந்துக்களும், இஸ்லாமியர்களுடன் சகோதரத்துடன் வாழ்கிறார்கள் என்பதற்கு இந்த திருமணமும் ஒரு சான்றுதான்.

Advertisement: