சாலிகிராமம் சினிமா படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சாலிகிராமத்தில் உள்ள சினிமா படப்பிடிப்பு தளத்தில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் ஒரு தளம் முழுவதும் தீயில் கருகியது.


Advertisement

அண்மைக்காலமாக திரைப்பட படப்பிடிப்பில் நிகழும் விபத்துகள், அத்துறையினரை அதிர்ச்சியடைய வைத்து வருகிறது. அதேவேளையில், போதிய பாதுகாப்பு இல்லாமல் நடைபெறும் திரைப்படப் படப்பிடிப்புகளினால் விபத்துகள் ஏற்பட்டு தொழிலாளா்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் திரைத்துறையினரையே உலுக்கியது.

Image result for படப்பிடிப்பு விபத்து


Advertisement

இந்நிலையில், சாலிகிராமம் சினிமா படப்பிடிப்பு தளத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ஒரு தளம் முழுவதும் தீயில் கருகியுள்ளது. நல்வாய்ப்பாக படப்பிடிப்பு ஏதும் நடைபெறாததால் யாருக்கும் பாதிப்பு இல்லை என கூறப்படுகிறது. தீவிபத்து குறித்து தகவலறிந்து 2 தீயணைப்பு வாகனத்தில் வந்த தீயணைப்பு வீரர்கள், ஒரு மெட்ரோ லாரி உதவி மூலம் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடியாத்தம் தொகுதி திமுக எம்.எல்.ஏ காத்தவராயன் காலமானார்

தலைவி திரைப்படத்திற்காக போடப்பட்ட படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து நடைபெற்றதாக கூறப்படுகிறது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement