குடியாத்தம் தொகுதி திமுக எம்.எல்.ஏ காத்தவராயன் காலமானார்

Gudiyattam-dmk-mla-kaththavarayan-died

குடியாத்தம் தொகுதி திமுக எம்.எல்.ஏ காத்தவராயன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.


Advertisement

2019-ஆம் ஆண்டு மே மாதம், தமிழகத்தில் 22 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு காத்தவராயன் வெற்றி பெற்றார்.

Image result for காத்தவராயன் எம்.எல்.ஏ


Advertisement

சிறிது காலமாக இருதய நோயால் அவதிப்பட்டு வந்த காத்தவராயன் ஒரு மாதத்திற்கு முன்புதான் அப்போலோ மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

டெல்லி உளவுத்துறை அதிகாரி பலமுறை கத்தியால் குத்திக்கொலை- வெளியான அதிர்ச்சி தகவல்

இந்நிலையில், இன்று உடல்நலக்குறைவால் காத்தவராயன் எம்.எல்.ஏ காலமானார். கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பல்வேறு மக்கள் பிரச்னைகள் குறித்து எடுத்து பேசியவர் காத்தவராயன். அதற்காக ஸ்டாலின் அவரை பாராட்டியிருந்தார். காத்தவராயன் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர், மத்திய மாவட்ட திமுக துணை செயலாளராகவும் இருந்துள்ளார். திருமணம் செய்துகொள்ளாத 59வயதான இவர் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கைதாகி சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Image result for திமுக எம்.எல்.ஏ

குண்டு பாய்ந்தே காவலர் மரணம்; கல்வீச்சில் கொல்லப்படவில்லை- பிரேத பரிசோதனையில் தகவல்

காத்தவராயன் மறைவால் 99-ஆக இருந்த திமுக எம்.எல்.ஏக்களின் பலம் 98-ஆக குறைந்துள்ளது. சென்னை திருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி நேற்று உடல்நலக் குறைவால் காலமான நிலையில் இன்று காத்தவராயன் காலமாகியுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement