டெல்லி வன்முறையில் உளவுத்துறை அதிகாரி அங்கிட் சர்மா பலமுறை கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
டெல்லியில் உள்ள வடகிழக்கு பகுதியான ஜாஃபராபாத்-தில் சிஏஏ-வுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. அதே பகுதியில் சிஏஏ-வுக்கு ஆதரவாகவும் பேரணி நடைபெற்றபோது, கடந்த திங்களன்று இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. கற்கள், கட்டைகளை கொண்டு இருதரப்பினரும் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.
மேலும் டெல்லியின் வடகிழக்கு பகுதிகளுக்கு வன்முறை பரவி ஆங்காங்கே கடைகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதோடு தீவைத்து கொளுத்தப்பட்டன. இதில் ஒரு காவலர் உட்பட 38 பேர் உயிரிழந்துள்ளனர். வன்முறையில் படுகாயம் அடைந்த 50-க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
டெல்லி நிலவரம் குறித்து ஐ.நா கவலை; அரையிறுதியில் இந்திய மகளிர் அணி; இன்னும் சில செய்திகள்
இதனிடையே மத்திய உளவுத் துறையில் உதவியாளராக இருந்த அன்கிட் சர்மா என்பவரின் உடல் சாக்கடை ஒன்றில் இருந்து மீட்கப்பட்டது. பணி முடித்து வீடு திரும்பிய அவர் கொல்லப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் தற்போது உளவுத்துறை அதிகாரி அங்கிட் சர்மா பலமுறை கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அங்கிட் சர்மாவின் உடலில் பல சிராய்வுகள், கூர்மையான ஆயுதங்களால் ஆழமான வெட்டு காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் பலமுறை குத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
டெல்லி வன்முறை: உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு
இதுகுறித்து போலீசார் கூறுகையில், “சர்மா, அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய பின்னர், வன்முறையின் நிலை குறித்து அறிய அவர் வெளியே சென்றுள்ளார். அப்போது வன்முறைக் கும்பலை எதிர்கொண்டபோது அவரை அடித்துக் கொலை செய்து, அவரது உடலை வடிகாலில் வீசியுள்ளனர்” எனத் தெரிவிக்கின்றனர்.
Loading More post
போராடும் விவசாயிகள் அமைதிகாக்க உச்சநீதிமன்றம் வேண்டுகோள்
லிங்கன் முதல் ஜெபர்சன் வரை: அமெரிக்க வரலாற்றில் மறக்க முடியாத 4 பதவியேற்பு விழா!
”சசிகலா விடுதலைக்கு பின்பும் எனது ஆட்சியே” - ஸ்டாலின் கருத்துக்கு முதல்வர் பதிலடி
சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியா? – ஸ்டாலின் பதில்!
வெளியானது வாக்காளர் பட்டியல்: ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம்
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி