டெல்லி வன்முறையின்போது ஏற்பட்ட கலவரத்தில் தலைமைக் காவலர் ஒருவர் கொல்லப்பட்டார். கல்வீச்சு தாக்குதலில்தான் தலைமைக் காவலர் உயிரிழந்ததாக முதலில் கூறப்பட்ட நிலையில், உடலில் குண்டு பாய்ந்து அவர் உயிரிழந்தது தற்போது தெரியவந்திருக்கிறது.
டெல்லியின் வடகிழக்கு பகுதியில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. வன்முறையில் தலைமைக் காவலர் ரதன் லால் உள்ளிட்ட 38 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
தலைமைக் காவலரான ரதன் லால், கல்வீச்சு தாக்குதலில்தான் உயிரிழந்தார் என முதலில் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது அவரது பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில் தலைமைக் காவலர் ரதன் லால் குண்டு பாய்ந்தே உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலில் இருந்து குண்டு எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
தன் கனவுகள் சிதைக்கப்பட்டாலும் புதிய விடியலுக்கு வித்திட்ட 'பவ்சியா'..! யார் இவர்..?
பிரேத பரிசோதனையின் அறிக்கையின்படி, அவரது இடது தோள்பட்டையில் நுழைந்த குண்டானது அவரது வலது தோள்பட்டை வரை சென்றதே மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவை எம்.பி பதவி: இரு தினங்களில் முதல்வரை சந்திப்போம் - பிரேமலதா விஜயகாந்த்
ரதன் லால் தவிரவும் சில போலீசார், வன்முறையில் காயமடைந்தனர். அவர்களுக்கும் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே டெல்லியின் வடகிழக்கு பகுதியில் நிலைமை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு