மாநிலங்களவை எம்.பி பதவி: இரு தினங்களில் முதல்வரை சந்திப்போம் - பிரேமலதா விஜயகாந்த்

premalatha-vijayakanth-speech

 


Advertisement

அதிமுக கூட்டணியில் அங்கம் வைக்கும் தேமுதிகவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்டு இரு தினங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க உள்ளதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் திருமணம் மண்டபத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா கூறியதாவது “டெல்லி கலவரம் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியது. இங்கு சி.ஏ.ஏ பற்றி சரியான புரிதல் இல்லை. ஜாதி மதத்தை தூண்டி விடுகின்றனர். நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதை உணர வேண்டும்.


Advertisement

image

குடியுரிமைச் சட்டம் நாட்டிற்கு நலன் என்றால் அதனை நாங்கள் வரவேற்போம் அதேநேரத்தில் அது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்றால், அதனை எல்லோருக்கும் முன்னதாக தேமுதிக எதிர்க்கும். குடியுரிமைச் சட்டம் எந்த ஒரு மதத்திற்கும் எதிரானது அல்ல. இச்சட்டத்தால் இங்கு வாழும் மக்களுக்கு பிரச்னை இல்லை என்பதை புரிய வைக்க வேண்டும். இதனை வைத்து அரசியல் செய்யக்கூடாது” என்றார்.

image


Advertisement

மேலும் டெல்லி வன்முறை தொடர்பான ரஜினியின் கருத்திற்கு பதில் கூற விரும்பவில்லை என்றார்.

தேர்தலில் கூட்டணி அமைக்கும்போது அதிமுகவினர் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பதாக கூறினார்கள். நாங்கள் கூட்டணி தர்மத்தோடு இருக்கிறோம். இன்னும் இரு தினங்களில் தேமுதிக நிர்வாகிகள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து எங்கள் உரிமையை கேட்போம்” என்று கூறினார்.

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement