JUST IN

பரனூர் சுங்கச்சாவடியில் மார்ச் 1 முதல் கட்டணம் என விளம்பரப் பலகை..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் வரும் 1-ஆம் தேதி நள்ளிரவு முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

பரனூர் சுங்கச்சாவடியில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி நள்ளிரவு அரசு பேருந்து ஓட்டுநருக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது. இதனையடுத்து மோதல் தொடர்பாக 8 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

டெல்லி வன்முறை: உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு

image

இதனையடுத்து நொறுக்கப்பட்ட சுங்கச்சாவடி பழுது பார்க்கப்பட்டது. அத்துடன் புதுக்கண்ணாடிகள், மின் விளக்குகள், சிசிடிவி கேமராக்கள் ஆகியவை பொருத்தப்பட்டன. இருப்பினும் கடந்த 33 நாட்களாக சுங்கச்சாவடியில் வாகனங்களிடம் இருந்து எந்த கட்டணமும் வசூலிக்கப்படவில்லை.

சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்கும் முதல் நாடாக மாறும் ஸ்காட்லாந்து..!

image

இந்நிலையில் மார்ச் 1-ஆம் தேதி முதல் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படும் என விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும், பிரச்னைகளை தடுக்கும் விதமாக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement: