JUST IN

மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் வன விலங்குகள்.. உயிர்ப்பலிகள் தொடர்வது நியாயமா..?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மாநகரமாக இருந்தாலும் சரி காடாக இருந்தாலும் சரி, இக்காலத்தில் மனிதன் தன்னை பற்றி மட்டுமே யோசிக்கிறான், தன்னை சுற்றியுள்ள மற்ற உயிர்கள் குறித்து யோசிப்பதில்லை. இதன் விளைவு காட்டுயிர்களின் உயிரிழப்புகள். மிக முக்கியமாக வனப் பகுதிகளையொட்டிய விளைநிலங்களில் மின்சாரம் பாய்ந்து யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் இறப்பது தொடர்கின்றன. இதுதொடர்பாக தவறு செய்தோர் மீது கடுமையான தண்டனை விதிக்க நடவடிக்கை தேவை என்பதே வன விலங்கு ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் பொதுவாக இதுபோன்ற வழக்குகளில் இருந்து பலரும் எளிதாக தப்பிவிடுகின்றனர் என்பதே பெரும் சோகமாக இருக்கிறது.

image

நேற்று கூட நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. சேரம்பாடி காவல்நிலையம் பின்புறமுள்ள உள்ள வனப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அங்கு ரோந்து சென்ற வனத்துறையினர் துர்நாற்றம் எங்கியிருந்து வருகிறது என பார்வையிட்டனர். அப்போது ஒரு யானை, 5 பன்றிகள், ஒரு கீரி மற்றும் 2 காக்கைகள் கருகிய நிலையில் உயிரிழந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து மேற்கொண்ட ஆய்வில், சிங்காராவில் இருந்து கேரளாவிற்கு செல்லும் உயரழுத்த மின்கம்பிகளின் மின்கோபுரத்திலிருந்து மின்கசிவு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அந்த மின்கசிவு பூமியில் பாய்ந்ததும் தெரிய வந்தது. இதனால் அவ்வழியாக சென்ற யானை, பன்றிகள், கீரி மற்றும் மின்சாரம் தாக்கி இறந்ததும் கண்டுப்பிடிக்கப்பட்டது.

மனிதனை யானைகள் எதிரியாக பார்க்கின்றனவா ? - இந்த பகைக்கு முற்றுப்புள்ளி எப்போது? 

image

தமிழக வனப் பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 1,113 யானைகள் பல்வேறு காரணங்களினால் உயிரிழந்துள்ளன. இதுதவிர, தமிழகத்தில் 2009 முதல் 2017-ஆம் ஆண்டு வரையில் 50 யானைகள் மின்வேலியில் இருந்து வெளிப்படும் மின்சாரம் தாக்கியே உயிரிழந்துள்ளன. வனப் பகுதிகளில் தந்தத்துக்காக யானைகள் கொல்லப்படுவதைவிட மின்சாரம் தாக்கி யானைகள் அதிகமாக உயிரிழக்கின்றன. முக்கியமாக, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய இடங்களில் தனியார் ஆக்கிரமித்துள்ள எஸ்டேட்டுகளில் போடப்பட்டுள்ள மின்வேலிகள் காரணமாக யானைகள் அதிகமாக உயிரிழந்துள்ளன.

image

யானைகள் மின்சாரம் பாய்ந்து இறப்புக்கு காரணம் என்ன?

விளைநிலங்களில் வன விலங்குகள் சேதப்படுத்துவதைத் தடுக்க 9 முதல் 12 வாட்ஸ் மின்சாரம் மட்டுமே மின்வேலிகளில் செலுத்தப்படலாம். இந்த மின்வேலியை தொடும் யானைகள், மான்கள், காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு அதிர்வை ஏற்படுத்தும். ஆனால் பாதிப்பு ஏற்படாது. இதனால் அவை பயந்து கொண்டு மீண்டும் வேலி அருகே வராது. தற்செயலாக கிராம மக்கள் மின்வேலியைத் தொட்டு விட்டாலும், பாதிப்பில்லாமல் பாதுகாப்பாக இருக்கலாம். இருப்பினும், சில தனியார் எஸ்டேட் முதலாளிகள் நிர்ணயித்த அளவைவிட யானைகளிடமிருந்து தங்களது தோட்டத்தைப் பாதுகாப்பதற்காக மின்வேலிகளில் கூடுதலான வாட்ஸில் மின்சாரத்தைச் செலுத்துகின்றனர். இதனால்தான், யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கின்றன.

உணவிற்காக உயிரை பணயம் வைக்கும் யானைகள் என்பது சரியா ? 

image

இதுகுறித்து கோயம்புத்தூரைச் சேர்ந்த காட்டுயிர் செயற்பாட்டாளர் கே.மோகன் ராஜ் கூறும்போது, “விளைநிலங்களில் யானைகள் புகாமல் தடுப்பதற்கு மின்வேலிகளில் பேட்டரி மூலமே அவற்றுக்கு மின்சாரம் செலுத்த வேண்டும். ஆனால், பலர் தங்கள் வீடுகளிலும், தோட்டங்களிலும் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை மின்வேலியிலும் பாய்ச்சுகின்றனர். இதனால், யானைகள் உள்ளிட்ட இதர வன விலங்குகள் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழக்கின்றன. அளவுக்கு அதிகமாக மின்சாரம் பாய்ச்சுவோரை கண்காணிக்க வேண்டும். மின்சாரம் பாய்ந்து வனவிலங்குகள் உயிரிழந்தாலும், தவறு செய்தோரை தண்டிக்க முறையான ஆதாரங்களை வனத் துறையினரால் சமர்ப்பிக்க முடிவதில்லை. இதனால், குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பித்து விடுகின்றனர். எனவே, விரைவில் கடுமையான விதிமுறைகளைக் கொண்டு வந்து கண்காணிக்க வேண்டும். யானை, புலி, சிறுத்தை போன்ற பெரிய உயிரினங்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பதால்தான் இந்த விஷயம் வெளியே தெரிகிறது. சிறிய வகை வன விலங்குகளும் இதனால் உயிரிழக்கின்றன” என்றார்.

Advertisement: