JUST IN

சீனாவில் இருந்து 112 பேரை அழைத்துக் கொண்டு டெல்லி திரும்பும் விமானம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில், 406 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதாகவும், 52 பேர் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் சுமார் 2 ஆயிரத்து 760 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 80 ஆயிரத்து 97 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகப்பட்சமாக சீனாவில் 2 ஆயிரத்து 715 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 64 ஆக உயர்ந்துள்ளது.

image

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளான சீனாவின் வுகான் நகருக்கு மருந்துப் பொருட்களை ஏற்றிச் சென்ற இந்திய விமானம்‌, அங்கிருந்து 76 இந்தியர்கள் உள்ளிட்ட 112 பேரை அழைத்துக் கொண்டு இன்று டெல்லி வர உள்ளது. சுமார் 15 டன் மருத்துவப் பொருட்களை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படை விமானம் நேற்று சீனா சென்றது.

image

கையுறை, முகக்கவசம் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை சீனாவிடம் ஒப்படைத்துவிட்டு, இந்தியர்கள் 76 பேர், பங்களாதேஷை சேர்ந்த 23 பேர் என மொத்தம் 112 பேரை அழைத்துக் கொண்டு விமானம் அங்கிருந்து புறப்பட்டது. அங்கிருந்து அழைத்துவரப்படும் அனைவரும் 14 நாட்கள் மருத்துவ கண்கா‌ணிப்பில் வைக்கப்பட உள்ளனர்.

பாகிஸ்தானுக்கும் பரவிய கொரோனா.. 2 பேர் பாதிப்பு

Advertisement: