இறப்பு சான்றிதழ் வழங்க லஞ்சம் - வருவாய் அலுவலக உதவியாளர் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஈரோட்டில் இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.3,000 லஞ்சம் வாங்கிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலக உதவியாளர் கைது செய்யப்பட்டார்.


Advertisement

ஈரோடு மாவட்டம் திங்களூர் அடுத்துள்ள பெரியவீரசங்கிலி பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் தனது மாமனாரின் இறப்பு சான்றிதழ் பெறுவதற்காக ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இறப்பு சான்றிதழ் பெற பலமுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று வந்த சத்தியமூர்த்தியிடம், எ1 பிரிவு உதவியாளராக பணிபுரிந்து வரும் கணேசன் என்பவர் ரூ.5000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. பின்னர் ரூ.3000 தந்தால் உடனடியாக சான்றிதழ் தருவதாக தெரிவித்தார்.

image


Advertisement

பணம் கொடுக்க விரும்பாத சத்தியமூர்த்தி, மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கணேசனிடம் சத்தியமூர்த்தி கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கணேசனை கையும் களவுமாக கைது செய்தனர்.

image

பின்னர் அவரிடமிருந்து ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் தொடர்புடைய அதிகாரிகள் குறித்து கணேசனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement

இந்துவா?முஸ்லிமா? என்று கேட்டார்கள்-திக் திக் நிமிடங்களை பகிர்ந்துகொண்ட பத்திரிகையாளர்

loading...

Advertisement

Advertisement

Advertisement