JUST IN

Advertisement

சிலை திருட்டு வழக்கின் 41 கோப்புகள் மாயம்? அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சிலைக்கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்கள் மாயமானதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement

சிலைக்கடத்தல் விவகாரத்தில் 41 வழக்குகளின் ஆவணங்கள் மாயமானதாகவும், இதுகுறித்து நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் எனவும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஆவணங்கள் தொடர்பான விசாரணை நடத்தும் வரை சிலை கடத்தல் வழக்குகளை முடிக்கத் தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வாட்ஸ்அப் குழு தொடங்கி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த புரோகிதர்..!


Advertisement

Image result for சிலைக்கடத்தல்

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆவணங்கள் மாயம் தொடர்பாக 2018ஆம் ஆண்டிலேயே புகார் அளித்தும் இதுவரை பதில் அளிக்காதது ஏன் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கடந்த 2 ஆண்டுகளாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி தலைமையில் நடைபெற்ற விசாரணை, தற்போது தான் தமிழக காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், ஆவணங்கள் குறித்து விளக்கம் அளிக்க கால அவகாசம் வேண்டும் எனவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

''கை நிறைய வருமானம் வருகிறது'' - பூக்கடை நடத்தும் பொறியியல் பட்டதாரி!


Advertisement

Image result for உயர்நீதிமன்றம் சிலைக்கடத்தல்

இதையடுத்து, புகார் மீதான நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி-க்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை மார்ச் 31-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement