“ட்ரம்பின் பயணம் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்” - பிரதமர் மோடி

PM-thanks-Trump-for-India-visit

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பயணம் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


Advertisement

2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் சந்திப்பு நடத்தினார். முதலில் அமெரிக்க அதிபர் ட்ரம்பும், பிரதமர் மோடியும் தனியே பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது‌ வர்த்தகம், ராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறை விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

கூட்டணி இல்லாமல் திமுக தனித்து போட்டி ? - பிரசாந்த் கிஷோர் யோசனை சரியா?


Advertisement

இ‌தனைத் தொடர்ந்து இருநாட்டு அதிகாரிகள் குழு அளவிலான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின் நிறைவில் இந்தியா - அமெரிக்கா இடையே சுகாதாரத்துறையில் சிகிச்சை, மருத்துவ பொருட்கள் தொடர்பாகவும், எல்என்ஜி விநியோக உட்கட்டமைப்பை வலுப்படுத்துவது என 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இரு தலைவர்கள் முன்னிலையில் கையெழுத்தாகின. மேலும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.

Image result for மோடி ட்ரம்ப்

இந்தியாவில் 2 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு, நேற்று இரவு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அவரை பிரதமர் நரேந்திர மோடி வழியனுப்பி வைத்தார்.


Advertisement

அமெரிக்கா புறப்பட்டார் அதிபர் ட்ரம்ப்

இந்நிலையில், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு, பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், “இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினோம். ட்ரம்பின் பயணம் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த சுற்றுப்பயணத்தில் ட்ரம்ப் தம்பதி இந்தியாவின் பன்முக கலாசாரத்தையும், விருந்தோம்பலையும் கண்டு மகிழ்ந்திருப்பார்கள் என நான் நம்புகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு ட்வீட்டில் ட்ரம்பின் மகள் இவாங்கா மற்றும் அவரது கணவர் ஜெரெட் குஷ்னரை குறிப்பிட்டு, விரைவில் இருவரும் மீண்டும் இந்தியாவுக்கு வருவார்கள் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement