ட்ரம்ப்புடன் இரவு விருந்தில் பங்கேற்ற ஏ.ஆர்.ரஹ்மான் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

குடியரசுத் தலைவர் மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அளிக்கப்பட்ட இரவு விருந்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்றுள்ளார்.


Advertisement

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரது மனைவி மெலனியா டிரம்ப் மகள் இவான்கா டிரம்ப் ஆகியோருடன் இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். நேற்று நண்பகலில் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு வருகை தந்த அவர், சபர்மதி காந்தி ஆசிரமம், மொதோரா மைதானம், தாஜ்மகால் ஆகிய இடங்களுக்குச் சென்றார்.

image


Advertisement

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், டொனால்ட் டிரம்புக்கு இன்று இரவு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்தில், பிரதமர் மோடி, துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு, மத்திய அமைச்சர்கள், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்களும் பங்கேற்றனர். மேலும் ஆஸ்கர் நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பிரபல சமையல் கலைஞர் விகாஷ் கண்ணா ஆகியோரும் ட்ரம்பின் இரவு விருந்தில் பங்கேற்றனர்.

நெருங்கும் ஐபிஎல் 2020 : ஆர்.சி.பி அணியின் பலம்; பலவீனம் என்ன?

இந்தியாவிற்கு வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்பை வரவேற்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வடிவில் பாடல் ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார். அந்தப் பாடலுக்கு ‘அஹிம்சை’ என அவர் தலைப்பிட்டார். வீடியோவில் உள்ள பாடல், முதலில் திருக்குறளுடன் தொடங்கியது.

image


Advertisement

இந்தப் பாடலை வெளியிட்ட ரஹ்மான், “காந்தியின் நிலமான இந்தியாவிற்கு வரும் ட்ரம்பை வரவேற்கும் விதமான எங்களின் பாடல் இங்கே வெளியாகிறது” எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும் இதனை ட்ரம்பிற்கு டேக் செய்தார். அதனை காந்தியின் அழியா கொள்கையான ‘அஹிம்சை’ என சுட்டிக்காட்டியும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement