அஸ்வின் புரிந்துகொள்வார்... மனம் திறக்கும் விராத் கோலி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் ஆடும்லெவனில் இடம்பெறாதது குறித்த காரணத்தை ரவிச்சந்திரன் அஸ்வின் புரிந்துகொள்வார் என்று இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி கூறியுள்ளார். 
இலங்கை அணிக்கெதிரான சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கோலி இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், ஆடுகளத்தின் சூழலுக்கு ஏற்ப ஆடும் லெவனைத் தேர்வு செய்வது அவசியம். அஸ்வின் மிகச்சிறந்த வீரர். அணியின் நன்மை கருதி எந்த முடிவையும் அவர் ஏற்றுக்கொள்வார். பீல்டிங் வியூகம் வகுப்பது உள்ளிட்ட விவகாரங்களில்தான் எனக்கும், அஸ்வினுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். ஆனால், வீரர்கள் தேர்வில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதில்லை என்றும் கோலி தெரிவித்தார். பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் போட்டியில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்படாதது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், விராத் கோலி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். 
 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement