JUST IN
  • BREAKING-NEWS ‌கொரோனா தடுப்பு பணிகளுக்காக மாநிலங்களுக்கு மத்திய அரசு மேலும் ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
  • BREAKING-NEWS ‌கொரோனா பாதிப்பால் ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 446 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS ‌உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்தை தாண்டியது
  • BREAKING-NEWS ‌சென்னை பம்மல், ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், திருநின்றவூர் அனகாபுத்தூர் உள்ளிட்ட இடங்களில் மழை
  • BREAKING-NEWS ‌கொரோனா தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் ரூ.100 கூட நிதியாக வழங்கலாம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS ‌10ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதவேண்டியது அவசியம் - முதல்வர் பழனிசாமி

வடிவேலுடன் ஒப்பிட்டு கலாய்த்த நெட்டிசன்ஸ்.. க்யூட்டாக பதிலளித்த ராஷ்மிகா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 

வடிவேலுவுடன்  தன்னை ஒப்பிட்டதை ஒப்புக்கொள்ள முடியாது என  நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார். 

‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ படங்கள் மூலம் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இவர் இணைந்து நடித்த இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. இதனைத்தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் மந்தனாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தது. அதன் பின்னர் சமூகவலைத்தளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்கள், நெட்டிசன்கள் மத்தியில் ஆதரவையும் விமர்சனங்களையும்சேர்த்தே பெற்றது.

imageimageimage

டெல்லி வன்முறையில் துப்பாக்கியை நீட்டி போலீசாரை மிரட்டும் இளைஞர் - வீடியோ

பொதுவாக தமிழ் சினிமாவில் வெளியிடப்படும் படங்களின் முன்னோட்டங்கள், பாடல்கள் போன்றவற்றை நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகளோடும், புகைப்படங்களோடும் ஒப்பிட்டு கிண்டல் செய்வது நெட்டிசன்களின் வழக்கம். இதில் சில வைரலும் ஆகிவிடும். இந்நிலையில் சமீபத்தில் ராஸ்மிகா தான் போட்டோஷூட்டில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இந்த புகைப்படங்களில் அவர் வெவ்வேறு ஒப்பனைகளில் இருந்தார்.

டெல்லி வன்முறை: சோனியா காந்தி, ராகுல் கடும் கண்டனம்

இதனை பார்த்த நெட்டிசன்கள், ராஷ்மிகா வெளியிட்ட வெவ்வேறு வகையான ஒப்பனை புகைப்படங்களை, வடிவேலுவின் ஒப்பனைகளோடு இணைத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இதனை பார்த்த நடிகை ராஸ்மிகா மந்தனா, இந்தப் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இதை “என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. வடிவேலு ஐயா நீங்கள் சோ க்யூட்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைராலாகி வருகிறது.

 

 

Advertisement: