JUST IN

டெல்லி வன்முறை: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டெல்லியில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் நேற்று போராட்டம் நடைபெற்றது. அதே பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் மூண்டது.

image

ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். அப்பகுதியில் வாகனங்கள், கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன. ஒரு பெட்ரோல் நிலையம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. சில வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. கோகுல்புரி பகுதியில், மெட்ரோ ரயில் நிலையம் அருகில் உள்ள மார்க்கெட்டிற்கும் தீ வைக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். வன்முறை காரணமாக ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா பகுதிகள் போர்க்களமாக மாறின.

image

இதனிடையே கோகுல்புரி பகுதியில் கல்வீச்சு சம்பவத்தில் படுகாயமடைந்த தலைமைக்காவலர் ரத்தன் லால் என்பவர், மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டார். இவர், ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியைச் சேர்ந்தவர். இவர் தவிர கல்வீச்சில் காயமடைந்த பொதுமக்களில் மூன்று பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

image

கலவரத்தில் காயமடைந்த காவல் உயரதிகாரிகள் ஷாதரா, அமித் ஷர்மா மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 105 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் காயமடைந்த மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். டெல்லி வன்முறையில் ஒரு காவலர், 4 பொதுமக்கள் என 5 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மேற்கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சமந்தா குறித்து பரவிய செய்தி... காட்டமாக பதில் அளித்த அதிதி ராவ்..!

Advertisement: