‘தாஜ்மஹால் ஆடம்பரமும் அழகும் பிரமிக்க வைக்கிறது’ - இவான்கா ட்ரம்ப்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தாஜ்மஹாலின் ஆடம்பரமும் அழகும் பிரமிக்க வைக்கிறது என அதிபர் ட்ரம்பின் மகள் இவான்கா அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.


Advertisement

அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு நாள் பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். அவருடன் மனைவி மெலனியா மற்றும் மகள் இவான்கா ஆகியோர் வருகை தந்துள்ளனர். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளை புத்துயிர் பெற செய்வதே இந்தப் பயணத்தின் நோக்கம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

image


Advertisement

இன்று காலை அகமதாபாத் விமான நிலையத்தில் வந்த ட்ரம்பிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமானத்திலிருந்து இறங்கிய ட்ரம்பை ஆரத்தழுவி மோடி வரவேற்றார். பின்னர், கார் வரை சென்று ட்ரம்பை சபர்மதி ஆசிரமத்திற்கு வழியனுப்பி வைத்தார். வழிநெடுகிலும் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை அடுத்து ட்ரம்ப் தனது குடும்பத்தினருடன் காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றார்.

image

அதன் பிறகு டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா மற்றும் அவரது கணவர் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் இன்று தாஜ்மஹாலுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இவான்கா ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக தனது செல்போனை ஒருவரிடம் கொடுத்தார்.


Advertisement

image

ஷாஜகான் தனது மனைவி மும்தாஜூக்காக கட்டிய தாஜ்மஹாலுக்கு டிரம்பும் அவரது மனைவி மெலனியாவும் வந்தனர். அப்போது அங்கே கைகோர்த்து நடந்தனர். மேலும் இவர்களுடன் அவரது மகள் இவான்கா ட்ரம்பும் வந்தார். இவர்கள் அனைவரும் தாஜ்மஹாலில் ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதுகுறித்து இவான்கா அவரது ட்விட்டர் பக்கத்தில், ‘தாஜ்மஹாலின் ஆடம்பரமும் அழகும் பிரமிக்க வைக்கிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

“தாஜ்மஹால் பிரமிப்பைத் தூண்டுகிறது. இந்தியக் கலாச்சாரத்தின் பணக்கார மற்றும் மாறுபட்ட அழகுக்கு காலத்தை மீறிய சான்று. இந்தியாவுக்கு நன்றி” என்று பார்வையாளர்களின் புத்தகத்தில் டிரம்ப் எழுதினார்.

image

இதற்கு முன்பாக அகமதாபாத்திலுள்ள மோதிரா ஸ்டேடியத்தில் ட்ரம்ப் ஆற்றிய உரையில், பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டினார். இந்தியாவுக்காக இரவும் பகலும் உழைக்கும் ஒரு ‘விதிவிலக்கான தலைவர்’ என்று வர்ணித்தார்.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement