புலிபோல மாறும் மனிதர்கள்- வியக்க வைக்கும் வீடியோ..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 நடிகர் ராகவா லாரன்ஸ் ட்விட்டரில், வண்ணம் பூசிய மனிதர்கள் ஒன்றாக கூடும்போது புலிபோல மாறும் வீடியோ ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வீடியோ பலரது பார்வையை ஈர்த்துள்ளது.


Advertisement

image

பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் மிகத் தீவிரமாக இயங்கி வருகிறார்கள். அதில் சிலர் தாங்கள் விரும்பும் தகவல்களை மட்டுமே பகிர்ந்து கொள்கிறார்கள். சர்ச்சையானதை தவிர்த்து பொழுதுப்போக்கிற்கான தளமாக சமூக ஊடகம் இருந்து வருகிறது. பலரையும் போலவே ட்விட்டரில் தீவிரமாக இயங்கி வருபவர் ராகவா லாரன்ஸ். தனது சேவை சார்ந்த செய்திகளை பதிவிடுவது, தனது படங்கள் சம்பந்தமான அறிவிப்புகளை வெளியிடுவது என லாரன்ஸ் ட்விட்டரை பயன்படுத்தி வருகிறார்.


Advertisement

சமந்தா குறித்து பரவிய செய்தி... காட்டமாக பதில் அளித்த அதிதி ராவ்..!

ரஜினியின் தீவிர ரசிகரான இவர், ரஜினி சார்ந்த சர்ச்சைகள் வரும்போது எல்லாம் அவருக்கு ஆதரவாக கருத்து சொல்லும் தளமாக ட்விட்டரைதான் பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் லாரன்ஸ் கலாப்பூர்வமான ஒரு வீடியோவை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அந்த வீடியோவில் பெண்கள் நான்கு பேர் உடல் முழுவதும் புலிபோல வண்ணம் பூசிக் கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கூடி மேடையில் குறிப்பிட்ட கோணத்தில் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து படுத்துக்கொள்கின்றனர். முதலில் தனித்தனியே உள்ளவர்கள் ஒன்றாக சேரும்போது நிஜமான புலி உருவம்போல் ஒரு தோற்றம் உருவாகிறது. மனித உருவங்கள் மறைந்து அச்சு அசலாக புலியாக மாறுகின்றனர். அதில் ஒருவர் கைகளை குவிக்கிறார். அது புலியின் முகமாக மாறுகிறது. ஒருவர் தன் கையை அசைக்கிறார். அது புலியின் வால் போன்று மாறுகிறது. இப்படி மாயாஜாலம் செய்யும் இந்தக் கலைத்துவம் மிக்க அந்த வீடியோ சமூக வலைத்தள வாசிகள் பலரை ஈர்க்கும்படி உள்ளது.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement