அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகையை வரவேற்கும் விதமாக காந்தியின் கொள்கையை தாங்கிய வீடியோ பாடல் ஒன்றை ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு அகமதாபாத் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமானத்திலிருந்து இறங்கிய ட்ரம்பை ஆரத்தழுவி மோடி வரவேற்றார். பின்னர், கார் வரை சென்று ட்ரம்பை சபர்மதி ஆசிரமத்திற்கு வழியனுப்பி வைத்தார். வழிநெடுகிலும் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
டெல்லி வன்முறை: பல இடங்களில் மெட்ரோ நிலையங்கள் மூடல்..!
காந்தி வசித்து வந்த சபர்மதி ஆசிரமத்திற்கு சென்ற அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அவரின் மனைவிக்கு கதர் ஆடையிலான சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆசிரமத்தின் பல்வேறு பணிகளையும் பார்வையிட்ட ட்ரம்ப் தம்பதிக்கு, காந்தி பயன்படுத்திய உபகரணங்களை மோடி விளக்கினார். காந்தி பயன்படுத்திய ராட்டையை, ட்ரம்ப்பும் அவரது மனைவி மெலனியாவும் கீழே அமர்ந்து கையால் சுற்றிப் பார்த்தனர். இங்கு வந்ததற்கு அடையாளமாய் அங்கிருந்த விருந்தினர் பதிவேடு புத்தகத்தில் தன்னுடைய கருத்துகளை பதிவிட்ட ட்ரம்ப் கையொப்பம் இட்டார்.
இந்நிலையில் இந்தியாவிற்கு வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்பை வரவேற்கும் விதமாக ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வடிவில் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பாடலுக்கு ‘அஹிம்சை’ என அவர் தலைப்பிட்டுள்ளார். வீடியோவில் உள்ள பாடல், முதலில் திருக்குறளுடன் தொடங்குகிறது.
“செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமம் தரும்”
என்ற குறளையொட்டி தொடங்கும் பாடல், தமிழைப் போற்றும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குறளுக்கு “தான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானவற்றைச் செய்தால், செய்த பிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்” என்பதே அர்த்தம் என தமிழறிஞர் மு.வ. விளக்கமளித்துள்ளார். தமிழில் தொடங்கினாலும் மீதியுள்ள அத்தனை வரிகளும் ஆங்கிலத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
Here's a track from us to welcome @POTUS to India ??, the land of Gandhi. https://t.co/61rjyhxV16 — A.R.Rahman (@arrahman) February 24, 2020
இந்தப் பாடலை வெளியிட்டுள்ள ரஹ்மான், “காந்தியின் நிலமான இந்தியாவிற்கு வரும் ட்ரம்பை வரவேற்கும் விதமான எங்களின் பாடல் இங்கே வெளியாகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதனை ட்ரம்பிற்கு டேக் செய்துள்ளார். காந்தியின் அழியா கொள்கையான ‘அஹிம்சை’ என சுட்டுக்காட்டியும் இருக்கிறார்.
Loading More post
''உருமாறிய கொரோனா மிகுந்த ஆபத்தானது'' - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
தாயகம் வருகின்றன தமிழக மீனவர்களின் உடல்கள்: காலை ஒப்படைப்பு!
45வது நாளாக மாணவர்கள் போராட்டம்: தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்
'ராகுலின் தமிழ் வணக்கம்': தமிழகத்தில் தேர்தல் பரப்புரையை இன்று தொடங்குகிறார் ராகுல்காந்தி!
ராகுல்காந்தி தமிழகம் வருகை.. உருமாறிய கொரோனா.. சில முக்கியச் செய்திகள்!
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’