இந்தியாவின் முதல் 5ஜி டெக்னாலஜி ஸ்மார்ட்போனை ரியல்மி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
2ஜி, 3ஜி, 4ஜி என வேகமாக வளர்ந்த இந்திய செல்போன் சேவை தொழில்நுட்பம் தற்போது அடுத்தகட்டமாக 5ஜி டெக்னாலஜியை எட்டியுள்ளது. 2020-ஆம் ஆண்டில் வெளியாகும் என வாடிக்கையாளர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த 5ஜி ஸ்மார்ட்போன்கள் ஒவ்வொன்றாக தற்போது வெளியாகத் தொடங்கியிருக்கின்றன.
அதன்படி, இந்தியாவின் முதல் 5ஜி டெக்னாலஜி ஸ்மார்ட்போனை ரியல்மி நிறுவனம் இன்று வெளியிட்டிருக்கிறது. ரியல்மி ‘எக்ஸ்50’ ப்ரோ எனப்படும் இந்த மாடல் ஸ்மார்ட்போன் தற்போது ஃபிளிப்கார்ட் மற்றும் ரியல்மி வணிக தளங்களில் விற்பனை செய்யப்படுகின்றது.
ஸ்நாப் ட்ராகன் 865 5ஜி பிளாட்ஃபார்முடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த போன், என்.எஸ்.ஏ/எஸ்.ஏ 5ஜி நெட்வொர்க்கை சப்போர்ட் செய்யும். அத்துடன் இதில் 65 எம்பி ஸ்குவாட் கேமரா உள்ளது. ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வசதிகளை பொருத்து மூன்று ரகங்களில் வெளியாகியுள்ள இந்தபோன், அதற்கேற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் கொண்ட ரகம் ரூ.37,999 என்றும், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் கொண்ட ரகம் ரூ.39,999 என்றும், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் கொண்ட ரகம் ரூ.44,999 என்றும் விற்பனை செய்யப்படுகிறது.
Loading More post
அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு?
பாமக விரும்பும் 23 தொகுதிகள் எவை? - அதிமுகவிடம் பட்டியல் சமர்ப்பிப்பு
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு: ஆன்லைன் மூலம் கையெழுத்தான ஒப்பந்தம்
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?