‘சூரிய ஒளி பின்புலத்தில் கெத்தாக குதிரையுடன்..’ - தனுஷ் பதிவிட்ட அசத்தல் புகைப்படம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

‘கர்ணன்’ படம் குறித்து நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் முக்கியமான தகவல் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.


Advertisement

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் ‘கர்ணன்’. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் இந்தப் படம் தொடர்பாக அப்டேட்டுகள் பெரிய அளவில் எதுவும் வெளியாகாமல் இருந்து வந்தது.

ஆனால், ‘கர்ணன்’ படம் தொடர்பாக கடந்த மாதம் 28-ஆம் தேதி கையில் வாளுடன் இருப்பது போன்ற படத்தினை தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதன் பிறகு படம் குறித்த செய்திகள் தொடர்ச்சியாக வெளியான வண்ணம் உள்ளன. கர்ணன் படப்பிடிப்பிற்கு தடை செய்ய வேண்டும் என்றும் ஒரு தரப்பினர் காவல் நிலையத்தில் மனு அளித்தனர். இருப்பினும், படப்பிடிப்புகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவே தகவல்கள் வெளியாகி வந்தன.

       image


Advertisement

விலகிய மிஷ்கின்? இயக்குநராகும் விஷால்? - குழப்பத்தில் துப்பறிவாளன்2 


இந்நிலையில், ‘கர்ணன்’ படம் குறித்து முக்கியமான தகவல் ஒன்றினை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் பதிவிட்டுள்ளார். அதில், ‘இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளது. 90 சதவீத படப்பிடிப்புகள் முடிந்துள்ளது’ என குறிப்பிட்டுள்ளார். அத்துடன், குதிரையுடன் இருப்பது போன்ற அற்புதமான புகைப்படத்தையும் அவர் பதிவிட்டிருந்தார். சூரிய ஒளியின் பின்புலத்தில் படம் எடுக்கப்பட்டுள்ளது. தனுஷ் டி-சார்ட் லுங்கியுடன் இருக்கிறார். டி-சார்ட்டில் நடிகர் விஜய்யின் படம் உள்ளது.


''ஜெயலலிதா போலவே கங்கனா இருக்கிறார்'' - தலைவி போஸ்டருக்கு குவியும் பாராட்டுகள்..! 


இயக்குநர் மாரிசெல்வராஜ் தன்னுடைய முதல் படமான பரியேறும் பெருமாளில் கருப்பி என்ற நாயை முக்கியமான கதாபாத்திரமாகவே இடம்பெறச் செய்தார். அதேபோல், இந்தப் படத்தில் குதிரை ஒரு முக்கியமான கேரக்டராக வரும் என எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளன.

loading...

Advertisement

Advertisement

Advertisement