புதிய உச்சத்தில் தங்கம் விலை - ஒரு சவரன் ரூ32,800க்கு விற்பனை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 


Advertisement

தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 28 ரூபாய் உயர்ந்து எப்போதும் இல்லாத உச்சத்தைத் தொட்டிருக்கிறது.

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருவது நடுத்தர குடும்ப மக்களை கலக்கம் அடைய வைத்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 29,880 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கத்தின் விலை ஜனவரி 8ஆம் தேதி 31,432 ரூபாய் என புதிய உச்சம் கண்டது.


Advertisement

‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சி நடைபெறும் அகமதாபாத் மைதானம் : எப்படி உலகின் பெரியது?

 

image


Advertisement

தொடர்ச்சியாக ஜனவரி 14ஆம் தேதி ஒரு சவரன் 30,112 ரூபாய்க்கும், பிப்ரவரி 8ஆம் தேதி 31,184 ரூபாய்க்கும், பிப்ரவரி 15ஆம் தேதி 31,392 ரூபாய்க்கும், பிப்ரவரி 20 ஆம் தேதி 31,840 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்நிலையில், ஆபரணத் தங்கம் இன்று எப்போதும் இல்லாத அளவாக ஒரு சவரன் 32,408 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஊருக்கு ஒதுக்குப்புறமாக தங்க வைக்கப்படும் பெண்கள்: 21ம் நூற்றாண்டிலும் இந்த அவலமா?..!

image

இந்நிலையில், தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 28 ரூபாய் உயர்ந்து எப்போதும் இல்லாத உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.32,800க்கு விற்பனை

செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.4,100க்கு விற்பனை
செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கத்தின் விலை:

24.02.2020: ரூ32,800
23.02.2020.: ரூ32,576
22.02.2020: ரூ32,576
21.02.2020: ரூ32,408
20.02.2020: ரூ31,824

19.02.2020: ரூ31,720
18.02.2020: ரூ31,408
17.02.2020: ரூ31,216
16.02.2020: ரூ31,392
15.02.2020: ரூ31,392

loading...

Advertisement

Advertisement

Advertisement