ஆங்காங்கே தண்ணீர் கேன்களுடன் நகராட்சி அலுவலர்கள் - தயார் நிலையில் ட்ரம்ப் நிகழ்ச்சி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியிலும் பங்கேற்கவுள்ள நிலையில், அவரை காண வரும் மக்களுக்காக தண்ணீர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Advertisement

image

 


Advertisement

இந்தியாவுக்கு வருகை தரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்‌ நேரடியாக குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு வந்திறங்குகிறார். நண்பகல் 11.40 மணிக்கு ட்ரம்ப் வரும் நிலையில், விமான நிலையத்திலிருந்து சபர்மதி ஆசிரமம் வரை, லட்சக்கணக்கானோர் பங்கேற்று பிரமாண்ட வரவேற்பு அளிக்கின்றனர்.

image

 


Advertisement

 

மனைவி மெலனியாவுடன் 12.15 மணிக்கு சபர்மதி ஆசிரமம் செல்லும் ட்ரம்ப், அங்கு மகாத்மா காந்தி தங்கியிருந்த அறை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க பொருட்களை பார்வையிடுகிறார். பிற்பகல் 1.05 மணி அளவில், ஒரு லட்சம் பேர் வரை அமரும் வகையில் கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.

image

 

ஊருக்கு ஒதுக்குப்புறமாக தங்க வைக்கப்படும் பெண்கள்: 21ம் நூற்றாண்டிலும் இந்த அவலமா?..!

இந்நிலையில், நமஸ்தே நிகழ்ச்சியை வருகையையொட்டி மைதானம் அருகில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்பதால், குடிநீருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 16 இடங்களில் அம்தவாத் நகராட்சி சார்பில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு இடத்திலும் நகராட்சியின் 3 அலுவலர்கள் இருப்பார்கள்.

loading...

Advertisement

Advertisement

Advertisement