ஊருக்கு ஒதுக்குப்புறமாக தங்க வைக்கப்படும் பெண்கள்: 21ம் நூற்றாண்டிலும் இந்த அவலமா?..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 


Advertisement

21ஆம் நூற்றாண்டிலும் ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு நாட்களில் ஊருக்கு ஒதுக்குப்புறமான கட்டடத்தில் பெண்களை தங்க வைக்கும் முறையை ஒரு கிராமம் பின்பற்றுவது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

'விமானம் அல்ல; மினி அதிபர் மாளிகை' - அசரவைக்கும் ட்ரம்ப் வருகை தரும் விமானத்தின் வசதிகள்!


Advertisement

image

மதுரையில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கூவலபுரம் கிராமம். இந்தக் கிராமத்தில் பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படும் காலங்களில் அவர்கள் வீட்டில் இருப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு தனி இடத்தில் வைக்கப்படுகிறார்கள். இதற்காக முட்டுத்துறை என்றழைக்கப்படும் இடத்தில் தங்குவதற்கு இரண்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அறைகளில் ஒன்று 15 அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்டதாக இருக்கிறது. மற்றொரு அறை 5 அடி அகலமும் 5 அடி நீளமும் கொண்டதாக இருக்கிறது. இந்த அறைக்கு வெளியே உள்ள மரத்தில் துணிப்பைகள் தொங்கவிடப் பட்டுள்ளன.

image


Advertisement

 

அந்த துணிப்பைகளில், உள்ளே இருக்கும் பெண்‌களுக்கு தேவையான தட்டு, டம்ளர், சாப்பாடு உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன. இவற்றை, குறிப்பி‌ட்ட நாட்களுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.‌ மாதவிலக்கு நாட்களில் பெண்கள் வீட்டிற்குள் நுழையக்கூடாது என்ற கட்டுப்பாடு, வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கும் பொருந்தும். அதோடு அந்தக் கட்டடத்தில் இருக்கும் பெண்களை தொடுபவர்கள் குளிக்காமல் வீட்டிற்குள் வர அனுமதிப்பதில்லை.
இந்தக் கட்டுபாடானது தெய்வ நம்பிக்கையின் அடிப்படையில் பின்பற்றப்படுவதாகவும் ப‌ல தலைமுறைகளாக இந்த நடைமுறையை பின்பற்றுவ‌தால் இதனை மிக இயல்பான ஒன்றாக ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் ஊர்மக்கள் கூறுகின்றனர்.

 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement