குஜராத் மாநிலம் அகமதாபாத் வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், விமான நிலையத்தில் இருந்து சபர்மதி ஆசிரமம் வரை அலங்கார ஊர்தியில் அழைத்துச் செல்லப்படுகிறார்.
ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா பங்கேற்கும் இந்த பிரமாண்ட ஊர்வலத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொள்கிறார். சபர்மதி ஆசிரமத்தை பார்வையிடும் ட்ரம்ப், அங்கிருக்கும் நதியின் அழகை ரசிக்க உள்ளார். இதைத் தொடர்ந்து உலகிலேயே மிகப்பெரிய மைதானம் என்ற சிறப்பை பெற்றிருக்கும் சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைக்கும் பிரதமர் மோடியும் டொனால்ட் ட்ரம்பும் தொழிலதிபர்கள், மாணவர்கள் மத்தியில் பேசுகின்றனர். இவை அனைத்தும் 3 மணி நேரத்தில் நடக்க இருக்கிறது. இதற்கு 115 கோடி ரூபாய் செலவு செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.
அகமதாபாத் விமான நிலையம் முதல் சர்தார் வல்லபாய் படேல் மைதானம் வழியாக சபர்மதி ஆசிரமம் வரையும் உள்ள சாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. சாலையோரங்களில் இருக்கும் குடிசைப் பகுதியை மறைத்து ஏழு அடி உயரத்துக்கு சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் 80 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடக்கின்றன.
ட்ரம்பிற்காக இவ்வளவு வசதிகளா? - ராஜபோக அம்சங்களுடன் தயார் நிலையில் இருக்கும் சாணக்யா அறை!
சபர்மதி ஆசிரமம் முதல் குடியரசுத் தலைவர் மாளிகை வரை: ட்ரம்பின் சுற்றுப்பயண விவரம்
இந்த பயணத்தின் போது பாதுகாப்பு பணிக்கு 15 கோடி ரூபாய் வரை செலவிடப்படுகிறது. சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நடக்கும் இரு தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்துக்கு ஒரு லட்சம் பார்வையாளர்கள் வருகை தர இருப்பதால் அவர்களை அழைத்து வர 10 கோடி ரூபாயும் அகமதாபாத் நகர சாலையின் அலங்கார செடிகள் நட்டு அழகுபடுத்தும் பணிகளுக்கு ஆறு கோடி ரூபாயும் செலவிடப்பட்டுகிறது. கலாசாரப்படி நடக்கும் ஆடம்பர ஊர்வலத்துக்கு 4 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட இருக்கிறது.
இதன் மூலம் 3 மணி நேரம் மட்டுமே தங்கியிருக்கும் ட்ரம்புக்காக நிமிடத்துக்கு ஒன்றரை கோடி ரூபாய் செலவிடப்படுவதாக கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகைக்கு தேவையான செலவுகளை மத்திய அரசு பகிர்ந்துகொண்டாலும் அதில் பெரும் தொகையை குஜராத் அரசே செலவிடுகிறது
Loading More post
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்கு விசாரணை!
மீண்டும் ஈ.வெ.ரா சாலையான கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு - நள்ளிரவில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்த்த கோடை மழை!
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!