வீடு புகுந்து மூதாட்டியிடம் நகைப் பறிக்க முயன்ற நபர் - தர்ம அடி கொடுத்த மக்கள்

man-attacked-old-woman-in-Coimbatore

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைத் தாக்கி நகையைப் பறித்த நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.


Advertisement

கோவை சூலூர் அருகே உள்ள கள்ளப்பாளையம் தெற்கு வீதி பகுதியைச் சேர்ந்தவர் பிரபாவதி(80). கணவர் இறந்த நிலையில், மனவளர்ச்சி குன்றிய மகன் புருஷோத்தமனுடன் (50) தனியாக வசித்து வருகிறார்.

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விஷாலின் ‘சக்ரா’ - வெளியான புகைப்படங்கள்


Advertisement

இந்நிலையில் மூதாட்டி வீட்டில் தனது மகனுக்கு உணவு ஊட்டிக்கொண்டிருந்த போது அதே ஊரைச் சேர்ந்த சுப்பிரமணி(42) என்பவர் திடீரென வீட்டிற்குள் புகுந்து மூதாட்டியைத் தாக்கியுள்ளார். பின்னர், அவரது கழுத்திலிருந்த நகையைப் பறிக்க முயன்றபோது பிரபாவதி கூச்சலிட்டுள்ளார்.

image

சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினரைக் கண்டு சுப்பிரமணி தப்பி ஓடியதாக தெரிகிறது. அவரைத் துரத்திப் பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து சூலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் மூதாட்டியிடம் வீடு புகுந்து நகைப் பறிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement