இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விஷாலின் ‘சக்ரா’ - வெளியான புகைப்படங்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விஷாலின் ‘சக்ரா’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை அடைந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாகச் செய்தி வெளியாகியுள்ளது.


Advertisement


விஷால் நடித்து வரும் ‘சக்ரா’ படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் நடிகர் விஷால் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதில் விஷால் இப்படத்திற்கான கடைசி காட்சிக்குத் தயாராவது பதிவாகியுள்ளது. மேலும் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்று வரும் பணிகளுக்கான படங்களையும் வெளியிட்டுள்ளது. இந்தப் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

image


Advertisement

இந்தப் படத்தினை விஷால் தனது சொந்த நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரி மூலம் தயாரித்து வருகிறார். இந்நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில் “ சென்னையைச் சுற்றி ‘சக்ரா’ படத்தின் கடைசிக்கட்ட நடந்து வருகிறது. அதன் விறுவிறுப்பான ஒரு கட்டம்” எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு சில தினம் முன்பாக ‘சக்ரா’ படக்குழு ‘இந்தியன்2’ படப்பிடிப்பில் நடந்த கோர விபத்திற்காகவும் அதில் உயிரிழந்த மூன்று பேர்களின் ஆன்மா சாந்தி அடைவதற்காகவும் அஞ்சலி செலுத்தப்பட்ட வீடியோ பதிவு ஒன்றையும் இதே ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து கொண்டிருந்தது.

வெளியானது ‘ஜிப்ஸி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...!

நடிகர் விஷால் ஒரு இராணுவ அதிகாரி வேடத்தில் ‘சக்ரா’வில் நடித்து வருகிறார். மேலும் இதில் இவருடன் ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். அறிமுக இயக்குநர் ஆனந்தன் இதனை இயக்கி வருகிறார்.


Advertisement

இந்தப் படக்குழு முன்பு கோவையில் ஒரு கட்ட படப்பிடிப்பை முடித்திருந்தது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement