"எங்கள் நாட்டில் விளையாடுங்கள்" - இந்தியாவிடம் பாகிஸ்தான் ரசிகர்கள் கோரிக்கை !

We-want-India-here-Lahore-fans-special-message-during-PSL-2020-for-revival-of-Indo-Pak-cricketing-ties

இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தானுக்கு வந்து போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்று அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது ஆசையை வெளிப்படுத்தியுள்ளனர்.


Advertisement

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் ஐபிஎல் போட்டி போல நடத்தப்படும் பிஎஸ்எல் டி20 போட்டிகளில் பாகிஸ்தானின் நட்சத்திர வீரர்களும், வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்தத் தொடரில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் போட்டியில் பங்கேற்றதற்காக வெஸ்ட் இண்டீஸ் வீரர் டாரன் சமிக்கு அந்நாட்டின் கவுரவ குடியுரிமை கொடுத்து மரியாதை செய்யப்பட்டது.

"கோலியை குறி வச்சு தூக்குனோம்" ட்ரெண்ட் போல்ட் ! 


Advertisement

image

இந்நிலையில் இஸ்லாமாபாத் யுனைடெட் மற்றும் முல்தான் சுல்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. அப்போது மைதானத்தில் இருந்த பாகிஸ்தான் ரசிகர்கள் பலர் "இந்தியா இங்கு வர வேண்டும்" என எழுதிய பதாகையை கையில் ஏந்திக்கொண்டு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பல்வேறு பிரச்னைகள் இருப்பதால் இந்தியா - பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் விளையாடவில்லை. அதேபோல இரு நாடுகளுக்கு இடையே தனிப்பட்ட முறையில் எந்தப் போட்டி தொடரும் நடைபெறவில்லை.

image


Advertisement

இவ்விரு அணிகளும் ஆசியக் கோப்பை, உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை என ஐசிசி நடத்தும் போட்டிகளில் மட்டுமே பங்கேற்று விளையாடி வருகிறது. கடைசியாக 2006 ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தான் சென்று போட்டிகளில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement