JUST IN

காஷ்மீர் தலைவர்கள் விடுதலை பெற பிரார்த்திக்கிறேன்: ராஜ்நாத் சிங்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முஃப்தி ஆகியோர் விரைவில் விடுதலையாக வேண்டிக் கொள்வதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

image

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்தானதை அடுத்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய மாநாட்டு கட்சித் தலைவர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெஹபூபா முஃப்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

போர்குற்ற தீர்மானத்திலிருந்து விலகியது ஏன் ? இலங்கை விளக்கம் 

image

பின்னர், மூவர் மீதும் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்புவதால் அங்கு வீட்டுக்காவலில் உள்ள அரசியல் தலைவர்கள் விரைவில் விடுதலை கிடைக்கவும், காஷ்மீர் மேம்பாட்டிற்காக அவர்கள் பாடுபட வேண்டும் என்றும் வேண்டிக் கொள்வதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Advertisement: