JUST IN

இந்தியா வரும் ட்ரம்ப்: பாதுகாப்பு பணியில் 5 சிங்கவால் குரங்குகள்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 

தாஜ்மஹாலை பார்வையிடும் ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தின் பாதுகாப்புக்காக 5 சிங்க வால் குரங்குகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.

image

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் முதன்முறையாக 2 நாள் பயணமாக நாளை இந்தியா வருகை தர இருக்கின்றனர். அகமதாபாத் விமான நிலையத்தில் வந்து இறங்கும் அவர்களுக்கு விமான நிலையத்தில் இருந்து வல்லபாய் கிரிக்கெட் மைதானம் வரை பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட இருக்கிறது. அவர்களின் வருகையையொட்டி அவரது பீஸ்ட் கார், மரைன் ஒன் ஹெலிகாப்டர் உள்ளிட்டவை அகமதாபாத்துக்கு வந்து இருக்கின்றன. மேலும் அகமதாபாத் நகரம் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

image

முதற்கட்டமாக அகமதாபாத்தில் உள்ள வல்லபாய் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைக்கும் ட்ரம்ப், அங்கு நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். இதில் 1.25 லட்சம் பேர் பங்கேற்க இருக்கின்றனர்.

இதனைத்தொடர்ந்து ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை பார்வையிடுகிறார் ட்ரம்ப். இதனால் தாஜ்மஹாலிலும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தை பாதுகாப்பதற்கு மட்டும் தனியாக அமெரிக்க ரகசிய உளவுத் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 10 துணை ராணுவப்படை குழுக்கள் 10 பிஏசி மற்றும் என்சிஜி ராணுவ குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன.

image

தாஜ்மஹாலை பொருத்தவரை அங்கு குரங்குகள் நடமாட்டம் அதிகம். இதனால் குரங்குகளிடம் இருந்து தலைவர்களை பாதுகாக்க அங்கு 5 சிங்கவால் குரங்குகளை பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சிங்கவால் குரங்குகளை கண்டால் சாதாரண குரங்குகள் அப்பகுதியை நெருங்காது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Advertisement: