குஜராத் மாநிலத்துக்கு வருகை தரவுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு தயார் செய்யப்படவுள்ள உணவுப் பட்டியலை சமையல் வல்லுனர் சுரேஷ் கண்ணா பகிர்ந்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நாளை இந்தியா வருகிறார். அவரின் பயணத் திட்டத்தின்படி குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு முதலில் செல்கிறார். அங்குள்ள சர்தார் வல்லபாய் படேல் விளையாட்டு மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் அவரும் பிரதமர் மோடியும் பேசுகிறார்கள். அகமதாபாத் வருகை தரும் ட்ரம்புக்கு ஃபார்ச்யூன் லேண்ட்மார்க் நட்சத்திர ஹோட்டலில் இருந்து உணவு வரவழைக்கப்பட இருக்கிறது.
இது குறித்து நட்சத்திர ஹோட்டலின் தலைமை சமையல் நிபுணர் சுரேஷ் கண்ணா கூறும்போது "அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு குஜராத்தின் உள்ளூர் உணவுகள் கொடுக்கப்பட இருக்கின்றன. உதாரணத்துக்கு கமன், ஸ்பெஷல் குஜராத்தி இஞ்சி டீ, சோள சமோசா, ஐஸ் டீ, கிரீன் டீ, தானிய பிஸ்கட்டுகள் வழங்கப்பட இருக்கின்றன. இவையெல்லாம் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அதற்கான தயாரிப்பு பணிகள் விறுவிறுவென நடைபெற்று வருகிறது" என்றார்.
கடந்த ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்கப் பயணம் மேற்கொண்டபோது, இந்தியாவுக்கு வருகை தர வேண்டும் என ட்ரம்புக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்றுக் கொண்டு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகிறார் ட்ரம்ப். வரும் நவம்பரில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் மீண்டும் ட்ரம்பே போட்டியிட இருக்கும் நிலையில், அமெரிக்கவாழ் இந்தியர்களின் கவனத்தை ஈர்க்கவே அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார் எனக் கூறப்படுகிறது.
Loading More post
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் ஒரேநாளில் 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு - 44 பேர் உயிரிழப்பு
வேலூர்: அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என புகார்