பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஜோகோவிச், ஆஸ்திரிய வீரர் டொமினிக் தைமிடம் 7-6, 6-3, 6-0 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய டொமினிக் தைமுக்கு முதல் செட்டில் மட்டுமே ஜோகோவிச் நெருக்கடி கொடுத்தார். டை பிரேக்கர் வரை சென்ற அந்த செட்டை டொமினிக் தைம், 7-6 என்ற கணக்கில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் ஆதிக்கம் செலுத்திய தைம், 6-3 என்ற கணக்கில் வென்றார். இதையடுத்து நடந்த 3ஆவது செட்டில் ஜோகோவிச் எந்தவிதமான எதிர்ப்பும் கொடுக்காமல் பணிய 3ஆவது செட்டை 6-0 என்ற கணக்கில் வென்ற தைம், போட்டியை 7-6, 6-3, 6-0 என்ற நேர் செட்களில் வெற்றியை வசமாக்கினார். களிமண் களத்தின் ராஜா என்றழைக்கப்படும் ரபேல் நாடாலை பிரெஞ்சு ஓபன் தொடரின் காலிறுதியில் வீழ்த்திய டொமினிக் தைம், பிரெஞ்சு ஓபன் அரையிறுதியில் நாடாலுடன் மீண்டும் மோதுகிறார்.
Loading More post
கட்சிக்கு தனித்துவத்தை விரும்பும் வைகோ: கடந்த பேரவைத் தேர்தல்களும் மதிமுகவும்!
அசாம் தேர்தல் களம்: தேயிலைத் தொழிலாளர்களை குறிவைக்கும் பாஜக, காங்கிரஸ்!
திருப்பூர்: ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளை - வட மாநில கொள்ளையர்கள் 6 பேர் கைது.!
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல்களம்.. மீண்டும் குழப்பத்தில் புதுச்சேரி.. முக்கியச் செய்திகள்!
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?