JUST IN

“அதிமுக யார் கையிலும் இல்லை; மக்கள் கையில் உள்ளது”- செல்லூர் ராஜூ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 

அதிமுக யார் கையிலும் இல்லை. மக்கள் கையில் மட்டுமே உள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை செயிண்ட் மேரீஸ் தேவாலயத்தில் அன்னதான நிகழ்வை துவக்கி வைத்து அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் “திமுக மதரீதியாக மக்களை பிரித்து, சிறுபான்மையினர் வாக்குகளை பெறுவதற்காக செயல்படுகிறது.

image

இந்த எண்ணத்தை கண்டிக்கிற வகையில் ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஜெயலலிதா சிறுபான்மை இன மக்களுக்கு எப்படி அரணாக இருந்தாரோ அதேபோல தற்போது முதல்வர் எடப்பாடியும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்து வருகிறார்.

 

சிறுபான்மையினருக்கு முதலமைச்சர் செய்து வரும் நலத்திட்டங்களை கண்டு திமுகவினர் ஆச்சரியப்படுகின்றனர். திமுக ஆட்சியில் செய்யாத குடிமராமத்துப் பணிகளை அதிமுக ஆட்சியில் செய்து வருகிறோம். அதிமுகவின் திட்டங்களை பார்த்து திமுக தலைவர் ஸ்டாலின் திருந்த வேண்டும். அவர் திருந்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

image

ராஜகண்ணப்பன் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்து, அதன் பின்னர் அதிமுகவிலும் செல்லாமல் மீண்டும் திமுகவில் இணைகிறார். இதைக்கூட பெரிய விஷயமாக திமுக கருதுகிறது.

 பிரதமர் கையில் முதல்வர் இருந்தால் என்ன தப்பு என பாஜகவின் முரளிதரராவ் பேசியது குறித்து கேட்ட கேள்விக்கு, பதிலளித்த செல்லூர் ராஜூ அதிமுக யார் கையிலும் இல்லை. மக்கள் கையில் மட்டுமே உள்ளது.

மக்களுக்காகத்தான் மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம். மேலும் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்ததால்தான் தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன” என்றார்.

Advertisement: