JUST IN

Advertisement

"“பட்டியலினத்தவர்கள் நீதிபதியாவது யாரும் போட்ட பிச்சை அல்ல" - திருமாவளவன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
70 வயதுவரை நடித்து முடித்தவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வர விரும்பும்போது, 30 ஆண்டுகளாக மக்கள் தொண்டாற்றி வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஆட்சிக்கு வரக்கூடாதா என அதன் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், தேசம் காப்போம் என்ற பேரணி திருச்சியில் நடைபெற்றது. பேரணியின் நிறைவில் குடியுரிமை திருத்தச் சட்டம், என்.பி.ஆர், என்.ஆர்.சி. ஆகியவற்றை திரும்பப் பெற வலியுறுத்தியும் இட ஒதுக்கீடு உரிமையைப் பாதுகாத்திட கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது பேசிய கட்சியின் தலைவர் திருமாவளவன், பட்டியலின மக்கள் நீதிபதிகள் ஆகும் நிலை உருவானது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியது தொடர்பாக பதிலளித்தார்.
 
அதில், “பட்டியலினத்தவர்கள் நீதிபதியாவது யாரும் போட்ட பிச்சை அல்ல. அது அரசியலமைப்பு சட்டம் தந்த உரிமை. மறுக்கப்பட்ட உரிமையை அரசியலமைப்பு சட்டம் வழங்கியது” என தெரிவித்தார்.
 
image
 
அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவை தீர்மானிக்கும் கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருக்கும் என குறிப்பிட்ட திருமாவளவன், 70 வயதுவரை நடித்து முடித்தவர்களே ஆட்சிக்கு வரவிரும்பும்போது விடுதலைச் சிறுத்தைகள் ஆட்சிக்கு வரக்கூடாதா என கேள்வி எழுப்பினார்.
 
image
 
அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் அடுத்த மாதம் நடத்தும் பேரணியில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும் என்று திருமாவளவன் கூறினார்
 
 
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement