தனது உருவத்தை சக மாணவர்கள் கேலி செய்ததால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கண்ணீர் சிந்திய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 9 வயது சிறுவனை உலகமே சமாதானப்படுத்தி வருகிறது. ஆஸ்திரேலியா ரக்பி அணியை மைதானத்துக்கு வழிநடத்திச் செல்லும் கௌரவம் அந்தச் சிறுவனுக்கு கிடைத்துள்ளது.
9 வயது சிறுவன் ஒருவன் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகச் சொல்லி அழும் ஒரு காட்சி உலகம் முழுவதும் பலரின் கண்களை குளமாக்கியது. பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்த 9 வயது சிறுவனான குவாடன் பெய்ல்ஸ், வளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார். உயரம் குறைந்த தோற்றத்தில் இருக்கும் குவாடன், பள்ளியில் சக மாணவர்களின் தொடர் கேலிக்கு ஆளாகி மனதளவில் சித்ரவதை அனுபவித்துள்ளார்.
அதனால், தற்கொலை எண்ணம் உதித்து கதறி அழும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார் அவரது தாய். கேலி கிண்டல்களின் பாதிப்புகளை உணர்ந்து கொள்ளுமாறு அவர் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகன் எரிக் ட்ரம்ப், விளையாட்டு மற்றும் திரைப்பிரபலங்கள் குவாடனுக்கு ஆதரவுக்கரம் நீட்டினர்.
இதன் தொடர்ச்சியாக, சிறுவன் குவாடனுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்த முன்வந்தது ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி. குயின்ஸ்லேண்டில் நடைபெற்ற போட்டியில் மைதானத்துக்குள் நுழையும் ஆல் ஸ்டார் அணியின் வீரர்களை, முன்னின்று வழிநடத்திச் செல்ல குவாடனை அழைத்தது. ரக்பி ரசிகர்கள்கரவொலியின் பின்னணியில், ஒரு கையில் ரக்பி பந்துடன், மறு கையில் வீரர் தாம்சனின் விரல்களைப் பற்றி மைதானத்தில் நுழைந்தார் குவாடன்.
இதனிடையே, குவாடனை போலவே வளர்ச்சி குறைபாடு கொண்ட பிரபல ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் பிராட் வில்லியம்ஸ், சிறுவனுக்காக நிதி திரட்டத் தொடங்கினார். அந்தத் தொகை 3 லட்சம் டாலருக்கும் அதிகமாக சேர்ந்துள்ளது. வளர்ச்சி குறைபாடுடைய சிறுவனை சமூகத்தில் சிலர் கேலி செய்த நிலையில் தற்போது அச்சிறுவனுக்கான ஆதரவுக்கரம் உலகம் முழுவதிலும் இருந்து நீள்கிறது.
"ஒரே கோத்திரத்தில் திருமணம்" மகளை கொலை செய்த குடும்பத்தினர் !
Loading More post
திருச்சி: மழைநீரில் மூழ்கி 50,000 ஏக்கர் நெற்பயிர் நாசம்; இழப்பீடு வழங்க கோரிக்கை
’’நான் நிச்சயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன்’’ - முதல்வர் பழனிசாமி
கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இருப்பது என்ன?
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு