சிங்கப்பூருக்கு அவசியமற்ற பயணத்தை தவிருங்கள்- மத்திய அரசு

Coronavirus-Govt-asks-citizens-to-avoid-non-essential-travel-to-Singapore

சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் அவசியமற்ற பயணங்களை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.


Advertisement

சீனாவின் வுஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 80 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சீனாவைத் தவிர்த்து, ஜப்பான், ஹாங்காங், பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், தைவான் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் கொரோனா பரவியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த பலகட்ட முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

image


Advertisement

“3000 டன் தங்கப் படிமங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை” - ஆய்வு நிறுவனம் மறுப்பு 

இந்நிலையில் சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் அவசியமற்ற பயணங்களை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பு நடவ‌டிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில், வெளியுறவுத்துறை, சுகாதாரம், விமான போக்குவரத்து, பாதுகாப்பு உள்ளிட்ட அமைச்சரவைகளை சேர்ந்த செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

image


Advertisement

“சிஏஏ ஒட்டுமொத்த தேசத்திற்கே எதிரானது” - திருமாவளவன் 

தற்போது சீனா, ஹாங்காங், தாய்லாந்து, தென்கொரியா, சிங்கப்பூரில் இருந்து வரும் இந்தியர்கள் விமான நிலையங்களில் பரிசோதிக்கப்படுகின்றனர். வரும் திங்கள்கிழமை முதல் காத்மாண்டு, இந்தோனேஷியா, வியட்நாம், மலேசியாவில் இருந்து வரும் இந்திய பயணிகளிடம் கொரோனா பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் மத்திய சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement