பட்டியலினத்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நீதிபதியானது யாரும் போட்ட பிச்சை அல்ல, அது அரசியலமைப்பு சட்டம் தந்த உரிமை என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், என்பிஆர் மற்றும் என்ஆர்சி ஆகியவற்றை செயல்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் திருச்சியில் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய திருமாவளவன், “குடியுரிமைத் திருத்தச் சட்டம், சிஏஏ, என்ஆர்சி மற்றும் என்பிஆர் ஆகியவை இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரானதல்ல; ஒட்டுமொத்த தேசத்திற்கே எதிரானது. அதனால்தான் இந்தப் பேரணியை நடத்தியுள்ளோம்.
பாஜக என்பது வெறும் அரசியல் கட்சியல்ல; அதை இயக்குவது ஆர்எஸ்எஸ்தான். இவர்களின் கனவை நினைவாக்கும் அரசுதான் பாஜக அரசு. சங்பரிவாரிகளின் முதல் கோபம் அரசியலமைப்பு சட்டத்தின் மீதுதான். காரணம் அதுதான் சாதி அமைப்பை தகர்த்து வருகிறது. அதுதான் சமத்துவத்தையும், சமூக நீதியையும் பேசுகிறது. எனவே அதை தகர்க்கப்பார்க்கிறார்கள். பட்டியலினத்தவருக்கு வழங்கப்பட்டுள்ள நீதிபதியானது யாரும் போட்ட பிச்சை அல்ல. அது அரசியலமைப்பு சட்டம் தந்த உரிமை. மறுக்கப்பட்ட உரிமையை அரசியலமைப்பு சட்டம் வழங்கியது.
ஐபேக்-க்கு போட்டியாக களத்தில் புதிய கார்ப்பரேட் நிறுவனம்: சூடுபிடிக்கும் அரசியல் நகர்வு
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மார்ச் 4ஆம் தேதி பிரகாஷ் அம்பேத்கர் தலைமையில் டெல்லியில் நடக்கும் பேரணியில் விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்கும்” எனக் கூறினார்.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!