JUST IN

“தூங்க முடியாமல் தவிக்கிறேன்” - இஷாந்த் சர்மா கவலை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியா - நியூசிலாந்து அணிக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 165 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் டாம் லேதம் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு ஆட்டக்காரர் டாம் பிளெண்டல் 30 ரன்களில் பெவிலியன் திரும்ப, கேப்டன் வில்லியம்சனும், ராஸ் டெய்லரும் ஜோடி சேர்ந்து சீரான வேகத்தில் ரன்கள் சேர்த்தனர். தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் ராஸ் டெய்லர், 44 ரன்களில் கேட்ச் ஆனார்.

 

image


"ஜடேஜா ஒரு ராக்ஸ்டார்" - ஹாட்ரிக் விக்கெட் சாய்த்த ஆஸி. வீரர் ஆஷ்டன் அகர் 


நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில்லியம்சன் 89 ரன்களில் ஷமி பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் சேர்த்துள்ளது. இந்தியாவை விட நியூசிலாந்து அணி தற்போது 51 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய இஷாந்த் சர்மா ‌3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரன்களும் குறைவாகவே விட்டுக் கொடுத்தார். பும்ரா அதிக ரன்களை விட்டுக் கொடுத்து விக்கெட்டும் எடுக்காத நிலையில், அனுபவ வீரரான இஷாந்த் சர்மா நேர்த்தியாக பந்துவீசினார். இது நியூசிலாந்து அணி அதிக ரன்கள் எடுப்பதை ஓரளவு கட்டுப்படுத்தியுள்ளது.

image


வில்லியம்சன் அரைசதத்தால் நியூசிலாந்து முன்னிலை - மீண்டு வருமா இந்தியா அணி? 


இந்நிலையில், போட்டிக்கு பின்னர் பேசிய இஷாந்த் சர்மா தன்னுடைய உடல்நிலைக் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார், அப்போது, “நான் மகிழ்ச்சியாக இல்லை. கடந்த இரண்டு நாட்களாக தூங்கவேயில்லை. இன்று கூட சிரமப்படுகிறேன். நான் விரும்பிய விதத்தில் என்னால் பந்துவீச முடியவில்லை. அணி நிர்வாகம் என்னைக் கேட்டுக் கொண்டதால் விளையாடினேன். அணிக்காக எதனையும் செய்வேன். மகிழ்ச்சியாக இல்லை என்பது பந்துவீசுவதில் அல்ல. என்னுடைய உடல்நிலை மகிழ்ச்சிகரமாக இல்லை. நேற்று இரவு 40 நிமிடங்கள் மட்டுமே உறங்கினேன். நேற்று முன் தினம் 3 மணி நேரம்தான் தூங்கினேன்.

image

தூக்கமின்மை, தலைவலி, தலைச்சுற்றல், சோர்வு மற்றும் ஆற்றல் இழப்பு ஆகியவற்றில் இருந்து எவ்வளவு தூரம் மீண்டு வருகிறேனோ அவ்வளவு தூரம் என்னால் களத்தில் பந்துவீச முடியும். நன்றாக தூங்கினாலே நன்றாக மீண்டுவிடுவேன்” என்று வலியுடன் கூறினார்.

Advertisement: