பிரதமர் நரேந்திர மோடி உலகளவில் சிந்திக்கிறார், அதனை தேசிய அளவில் செயல்படுத்துகிறார் என்று உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஷ்ரா புகழாரம் சூட்டியுள்ளார்.
டெல்லியில் "சர்வதேச நீதித்துறை மாநாடு: நீதித்துறையும் மாறும் உலகமும்" என்ற தலைப்பிலான கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஷ்ரா, பிரதமர் மோடியையும், மத்திய சட்டத் துறை அமைச்சரான ரவிசங்கர் பிரசாத்தையும் வானலாவ உயர்த்தி பேசினார். அப்போது பேசிய அவர், "ஓர் உன்னத மனிதர் நாட்டின் பிரதமராக இருக்கிறார். அவர் ஒரு பல்துறை வித்தகர், ஆகச் சிறந்த அறிவாளி. அவரால் உலகளவில் சிந்தித்து தேசியளவில் அதனை நடைமுறைப்படுத்துகிறார். இத்தகைய கருத்தரங்கம் நடைபெறுவதற்கும், அதில் எவ்வாறான தலைப்புகள் இடம்பெற வேண்டும் என கூறியவர் பிரதமர் மோடி. அதற்காக அவருக்கு என்னுடைய நன்றிகள்".
ஐபேக்-க்கு போட்டியாக களத்தில் புதிய கார்ப்பரேட் நிறுவனம்: சூடுபிடிக்கும் அரசியல் நகர்வு
மேலும், தொடர்ந்து பேசிய அருண் மிஷ்ரா, "உலகில் இருக்கும் பல்வேறு மக்கள் இந்தியாவில் எப்படி ஜனநாயகம் அவ்வளவு சீராக செயல்படுகிறது என ஆச்சரியமாக பார்க்கின்றனர். இந்தியாதான் உலகில் இருக்கும் பல்வேறு நாடுகளுக்கும் நல்ல நண்பனாக இருக்கிறது. அதற்கு பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டங்களே காரணம். இந்தியா சட்டத்தால் கட்டமைக்கப்பட்ட நாடு. இங்கு மக்கள் சட்டத்திற்கு கட்டுப்படுகிறார்கள். அதனால்தான் தீவிரவாதமின்றி மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள்".
இருமல் மருந்து குடித்ததால் 9 குழந்தைகள் உயிரிழப்பு: அது என்ன மருந்து?
இப்போதுள்ள நீதித்துறை குறித்து பேசிய அருண் மிஷ்ரா, "இப்போது நாம் 21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து வருகிறோம். நாட்டின் நலனுக்காக எதிர்காலத்துக்கு வலுவான உள்கட்டமைப்பு வசதிகள் தேவைப்படுகிறது. அதனை படிப்படியாக செய்து வருகிறோம். நீதித்துறையே ஜனநாயகத்தின் முதுகெலும்பு என்பதனை நாம் மறந்துவிடக்கூடாது. அதேநேரத்தில் சட்டங்களை நிறைவேற்றும் நாடாளுமன்றம் நாட்டின் இதயம் போன்றது. அதனை நடைமுறைப்படுத்துபவரது மூளை போன்றது. இந்த மூன்றும் ஒன்றாக வேலை செய்தால்தான் ஒரு நல்ல ஜனநாயக அரசால் சிறப்பாக செயல்பட முடியும்" என்றார்.
Loading More post
நெல்லை: அணைகளில் உபரிநீர் திறப்பு குறைப்பு; தாமிரபரணியில் வெள்ளம் சற்று குறைந்தது!
திருச்சி: மழைநீரில் மூழ்கி 50,000 ஏக்கர் நெற்பயிர் நாசம்; இழப்பீடு வழங்க கோரிக்கை
’’நான் நிச்சயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன்’’ - முதல்வர் பழனிசாமி
கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இருப்பது என்ன?
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு