புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக, மதுபோதையில் பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு, கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் கொட்டாம்பட்டி அருகே வலைச்சேரிப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 23 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் சரவணன் பள்ளிக்கு மதுபோதையில் வந்தது குறித்து புதியதலைமுறை செய்தி ஒளிபரப்பியதுடன், இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனைத்தொடர்ந்து வட்டாரக் கல்வி அலுவலர் முத்துக்குமரன் பள்ளியில் விசாரணை மேற்கொண்டதைத் தொடர்ந்து. பள்ளியின் தலைமையாசிரியர் சரவணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதனையடுத்து இதுகுறித்து செய்தி வெளியிட்டு உரிய நடவடிக்கை எடுத்த புதியதலைமுறைக்கும், மாவட்ட கல்வி அதிகாரிக்கும் நன்றி தெரிவித்து கிராம மக்கள் சார்பில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: சமத்துவ மக்கள் கட்சி - ஐஜேகே கூட்டணி அமைத்து போட்டி
மீண்டும் ஒரு 2011... வாக்குப்பதிவு முடிந்து கிட்டத்தட்ட 1 மாதத்திற்குப் பின் ரிசல்ட்!
கொரோனா காலத்தில் 5 மாநிலத் தேர்தல்கள்: 3 புதிய நடைமுறைகள் அறிவிப்பு!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'