ட்ரம்ப் வருகையின் போது தாஜ்மஹாலில் பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு

Taj-Mahal-to-be-closed-for-public-for-a-day-during-Donald-Trump-visit

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வருகையை அடுத்து தாஜ்மஹாலில் ஒருநாள் மட்டும் பொதுமக்கள் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


Advertisement

அடுத்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா வருகைதர உள்ளார். அவரது வருகையின் போது பிப்ரவரி 24 மதியம் 12 மணி முதல் தாஜ்மஹால் பொது மக்களுக்காக மூடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

image


Advertisement

ஏ.என்.ஐ. செய்தி நிறுவத்துடன் பேசிய இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் ஆக்ரா பிரிவு கண்காணிப்பாளர் வசந்த்குமார் ஸ்வாங்கர், “பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தாஜ்மஹால் நினைவுச் சின்னத்திற்கு வருகை தரும் நாளில் மதியம் 12 மணி முதல் பொதுமக்கள் பார்வையிடுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தாஜ்மஹாலை அதிபர் டிரம்ப் பிப்ரவரி 24 அன்று பார்வையிடுவார்” என்று கூறியுள்ளார்.

“சிலருடன் சேர்ந்து இவ்வாறு செய்கிறார்”- பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்ட பெண்ணின் தந்தை

முன்னதாக, காவல்துறை நகர கண்காணிப்பாளர் போட்ரே ரோஹன் பிரமோத், “பிரதான பாதையில் மற்றும் தாஜ்மஹால் பகுதிக்கு அருகிலுள்ள அனைத்து வீடுகள், கடைகள், உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சோதனைக்கான செயல்முறை முடிவடைய உள்ளன. பாதுகாப்பு குறைபாடு ஏற்படாதவாறு இவை அனைத்தும் செய்யப்பட்டுள்ளன” என்றார்.


Advertisement

image

இந்த ஆவண சரிபார்ப்பு பணியின் போது ஆதார் அட்டையை காட்டுமாறு காவல்துறையினர் கேட்டுக் கொண்டதாக உள்ளூர் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் பிப்ரவரி 24 முதல் ட்ரம்ப் இந்தியாவுக்கு இரண்டு நாள் அரசு பயணம் வர உள்ளார். இந்திய வருகை குறித்து பேசியுள்ள ட்ரம்ப், தன்னை ஒருகோடி பேர் சேர்ந்து வரவேற்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement